தித்திக்கும் சுவை மிகுந்த மாம்பழ சட்னி
சமையல் குறிப்புகள்பொழுதுபோக்கு

தித்திக்கும் சுவை மிகுந்த மாம்பழ சட்னி

Share

தித்திக்கும் சுவை மிகுந்த மாம்பழ சட்னி

குழந்தைகள் முதல் பெரியோர் வரை விரும்பி உண்ணும், காலை உணவுடன் சேர்த்து உண்ண தித்திக்கும் சுவையுடன், இலகுவாகத் தயாரிக்கக்கூடிய மாம்பழ சட்னி தயாரித்துக் கொள்ள சிம்பிள் படிமுறை உங்களுக்காக………

தேவையான பொருள்கள்:

மாம்பழம் – 2
கடுகு – தாளிக்க
செத்தல் மிளகாய்- – 2
வறுத்த சீரகப் பொடி- 1 கரண்டி
மஞ்சள் தூள் – சிறிதளவு
வெல்லம்- தேவையான அளவு
நல்லெண்ணெய் – சிறிது
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

மாம்பழத்தை தோல் நீக்கி சிறிய சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளுங்கள்.

அடுப்பை சூடாக்கி, சட்டியை வைத்து சட்டி காய்ந்ததும் அதில் நல்லெண்ணெயை ஊற்றிக்கொள்ளுங்கள்.

எண்ணெய் சூடானதும், அதில் கடுகை சேர்த்து தாளித்து அதனுடன் செத்தல்மிளகாயை சேர்த்துக் கொள்ளுங்கள்.

பின்பு தோல் நீக்கி துண்டுகளாக வெட்டி வைத்த மாம்பழத்தை அதில் சேர்த்து வதக்கி மூடி விடுங்கள்.

அடுப்பை அளவான சூட்டில் வைத்து, 5 நிமிடங்கள் கழித்துமூடியைத் திறந்து பாருங்கள். கலவை நன்றாக வெந்து காணப்படும். அதனை நன்றாக மசித்து அதில் சீரகப்பொடி , உப்பு மற்றும் வெல்லத்தை சேர்த்துக் கொள்ளுங்கள்.

இதனுடன் தேவையாக அளவு தண்ணீரும் சேர்த்து சிறிது நேரம் வேக வையுங்கள். சிறிது நேரம் கழித்து அடுப்பிலிருந்து இறக்கி தேவையெனில் முந்திரி திராட்சையால் அலங்கரித்துக் கொள்ளுங்கள்.

இப்போது சூப்பரான தித்திக்கும் சுவையுடன் மாம்பழ சட்னி தயார்.

இதனை தோசை, பாண் மற்றும் வடை போன்ற உணவுகளுடன் சேர்த்து உண்ணலாம்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...