thalapathy66
சினிமாபொழுதுபோக்கு

‘தளபதி 66’ பர்ஸ்ட்லுக் – மிரள வைக்கும் அப்டேட்

Share

தளபதி விஜய் நடிப்பில் உருவாக்கி வரும் தளபதி 66 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்ற அதேவேளை, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது.

இந்நிலையில், ’தளபதி 66’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்தொடர்பான தகவல் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

நாளை மறுதினம் 22 ஆம் திகதி தளபதி விஜயின் பிறந்தநாள் வரவுள்ள நிலையில், பிறந்த நாளை முன்னிட்டு
படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகவுள்ளது என ’தளபதி 66’ பட தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ள தயாரிப்பு நிறுவனம், ’தளபதி 66’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூன் 21ஆம் தேதி மாலை 6.01 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தள பக்கங்களில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

தில் ராஜூ தயாரிப்பில் தமன் இசையில் கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவிண கே.எல் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகிறது.

விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். விஜய்யின் சகோதரர்களாக ஷாம் மற்றும் ஸ்ரீகாந்த் நடிக்கின்றனர். தந்தையாக சரத்குமார் நடிக்கிறார். மேலும் பிரபு, ஜெயசுதா, சங்கீதா, சம்யுக்தா, யோகி பாபு, உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகின்றனர். இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

#Cinema

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...