2 3 scaled
சினிமாசெய்திகள்

கமல் ஹாசன் கட்சியின் கொள்கை தான் என்ன? பாம்பை வைத்து சிம்பிளாக விளக்கிய நடிகை வினோதினி

Share

கமல் ஹாசன் கட்சியின் கொள்கை தான் என்ன? பாம்பை வைத்து சிம்பிளாக விளக்கிய நடிகை வினோதினி

மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொள்கை என்ன, என்ன? என்று நாளுக்கு நூறு தடவை கேட்போருக்கு நடிகை வினோதினி விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் நடிகை வினோதினி இணைந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது நடக்கும் சமூக செயல்களுக்கு கருத்துக்களை கூறுவது உண்டு.

அந்தவகையில், மக்கள் நீதி மய்ய கட்சியின் கொள்கை என்ன என்பதை சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

நடிகை வினோதினி தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொள்கை என்ன, என்ன? என்று நாளுக்கு நூறு தடவை கேட்போருக்கு.

சில கட்சிகளின் கொள்கைகளை film one-line போலச் சொல்லிவிட்டு, பின் எங்கள் கட்சியின் கொள்கையைச்சொல்கிறேன். சார்ந்தோர் எந்தெந்த கட்சியென்று நீங்களே கண்டறிவீராக. க்ளூவெல்லாம் கிடையாது.
1. பாம்பையும் பார்ப்பானையும் பார்த்தால், பார்ப்பானை அடி.
2. பாம்பையும் சசிகலாவையும் பார்த்தால், சசிகலாவை அடி.
3. பாம்பையும் முஸ்லிமையும் பார்த்தால், முஸ்லிமை அடி.
4. பாம்பையும் இடைச்சாதியினரையும் பார்த்தால், இடைச்சாதியினரை அடி.
5. பாம்பையும் தலித்தையும் பார்த்தால், தலித்தை அடி.
6. பாம்பையும் தெலுங்கனையும் பார்த்தால், தெலுங்கனை அடி.
7. பாம்பையும் கார்ப்பரேட்காரனையும் பார்த்தால், கார்ப்பரேட்காரனை அடி.

இவ்வாறாக, ஏதோ ஒரு எதிரியை முன்னிலைப்படுத்தியே கட்சிகள் இங்கு வளர்கின்றன. மக்கள் நலன் மறைந்து வெறுப்பே எஞ்சுகிறது. மனிதனுக்கும் மனிதனுக்கும் மத்தியில் வெறுப்பு தான் மேலோங்கியிருகிறது.

கடந்த 70 ஆண்டுகளில். நிற்க.மநீம – பாம்பையும் மனிதனையும் பார்த்தால், பாம்பை அடிக்காமல், பிடித்து ஸ்னேக் பார்க்கிற்கோ, காப்பகத்திற்கோ அனுப்பிவிடடு, மனிதனைக்காப்பாற்று.

சாதி, மதம், பொருளாதார பேதமென பிரிக்காமல், மனிதனை மனிதனாக மட்டுமே பார்க்கும், கோட்பாட்டில் மட்டுமே வேற்றுமைகாணும் பண்பைத் தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும் கடைபிடிப்பவர் எங்கள் தலைவர் கமல் ஹாசன் அவ்வழியே நாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...