த்ரிஷா பக்கத்து வீட்டுகாரருடன் பிரச்சனை.. நீதிமன்றம் சென்று எடுக்கப்பட்ட முடிவு

Trisha Krishnan to be arrested

த்ரிஷா பக்கத்து வீட்டுகாரருடன் பிரச்சனை.. நீதிமன்றம் சென்று எடுக்கப்பட்ட முடிவு

நடிகை த்ரிஷா மீண்டும் முன்னணி ஹீரோயினாக தற்போது கோலிவுட்டில் வலம் வர தொடங்கி இருக்கிறார். விஜய், அஜித் என தொடர்ந்து பெரிய ஹீரோக்களுக்கு ஜோடியாக தற்போது நடித்து வருகிறார். சமீபத்தில் ரிலீஸ் ஆன GOAT படத்தின் மட்ட பாடலில் அவரது நடனம் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

த்ரிஷா சென்னையில் Cenotaph Roadல் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். அங்கு பக்கத்து வீட்டுக்காரர் உடன் ஏற்பட்ட தகராறு பற்றி நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இரண்டு வீட்டுக்கும் பொதுவான மதில் சுவரை இடித்துவிட்டு பக்கத்து வீட்டு காரர் மாற்றி கட்ட முயற்சிப்பதாக த்ரிஷா வழக்கு தொடர்ந்து இருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் சுவரை இடிக்க இடைக்கால தடை விதித்து இருந்தது.

இந்நிலையில் இரண்டு தரப்பும் தற்போது பேசி சமரசம் செய்துகொண்டதாக நீதிமன்றத்தில் கூறி இருக்கின்றனர். அதனால் வழக்கு தற்போது முடித்து வைக்கப்பட்டு இருக்கிறது.

Exit mobile version