suriya
சினிமாபொழுதுபோக்கு

ஜோதிகாவை நெகிழச் செய்த சூர்யா

Share

நடிகை ஜோதிகாவின் கணவனாக இருப்பது பெருமை என நடிகர் சூர்யா நெகிழ்ச்சியாக பதிவு செய்துள்ளார்.

நடிகை ஜோதிகா நடித்துள்ள 50ஆவது படம் உடன்பிறப்பே.

இப் படத்தில் சசிகுமார், சமுத்திரக்கனி, சூரி, கலையரசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
படத்தை இரா.சரவணன் இயக்கியுள்ளார்.

உடன்பிறப்பே படம் தொடர்பான கலந்துரையாடல், இணையத்தில் இடம்பெற்றது. படக்குழுவினர் இந்தக் கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

இதன்போது சூர்யா பேசிய குரல்பதிவு ஒலிபரப்பப்பட்டது.

அந்த ஒலிப் பதிவில் ”எனக்கு ஜோதிகாவை  1998ஆம் ஆண்டின் இறுதியில்; இயக்குநர் வசந்த் அறிமுகம் செய்து வைத்தார். ஒரு பாறைக்கு மத்தியில் இருவரும் பார்த்துக்கொள்வது போன்றும், பின்னர் இருவரும் கையைப்பிடித்து நடந்துபோவது போன்றும் காட்சி படமாக்கப்பட்டது. அன்றில் இருந்து இப்போதுவரை ஜோதிகாவை ஆச்சரியமாகவே பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

வேறு ஒரு ஊரில் இருந்து வந்த பெண் வேறு ஒரு மொழியை கற்றுக்கொண்டு அந்த ஊரையும், மக்களையும் தன்னுடையதாக்கிக்கொண்டுள்ளார். 50 படங்கள் நடித்துள்ளார். அவர் எடுத்த முடிவுகள் எல்லாவற்றிலும் ஏன் எடுக்கிறோம். எதற்காக எடுக்கிறோம் என்பதில் தெளிவாக இருப்பார்.

ஏன் சில படங்கள் செய்தேன். ஏன் சில படங்கள் செய்யவில்லை என்பதிலும் தெளிவாக இருப்பார். எப்போதுமே எது சரியோ அந்த பக்கம் இருப்பார். அவருடைய படங்கள், உறவுகள், வாழ்க்கையில் எடுத்த முடிவுகள் என அனைத்தையும் ஆச்சரியமாக பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.

முதல் படத்தில் இருந்து இப்போதுவரை கைகோர்த்து நின்று கொண்டிருப்பதை சந்தோஷமாக பார்க்கிறேன். உன்னுடைய 50ஆவது படத்துக்கு வாழ்த்துகள் ஜோதிகா, உனக்கு நண்பனாக, கணவனாக இருப்பதற்கு இந்த உலகத்துக்கு நன்றி சொல்லிக்கொண்டிருக்கிறேன்” என நடிகர் சூர்யா நெகிழ்ச்சியாகக் கூறியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
07 2
பொழுதுபோக்குசினிமா

திரையுலகினருக்கு மகிழ்ச்சிச் செய்தி: நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட இயக்குனர் பாரதிராஜா வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பினார்!

தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனரும், கலைஞருமான பாரதிராஜா, நுரையீரல் தொற்று காரணமாக சென்னை அமைந்தகரையில் உள்ள...

26
பொழுதுபோக்குசினிமா

ரஜினி – கமல் இணையும் பிரம்மாண்ட படம்: மம்முட்டி வில்லனா? கோலிவுட்டை அதிரவைக்கும் புதிய அப்டேட்!

தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களான ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஒரே திரையில் தோன்றவுள்ள செய்தி...

cin
பொழுதுபோக்குசினிமா

நட்சத்திரங்களின் திருமண உடைகள்: கோடிகளில் ஜொலிக்கும் லெஹங்காக்கள் – ரசிகர்களை வியக்க வைக்கும் ஆச்சரியமான விலைப் பட்டியல்!

இந்தியத் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களின் திருமணங்கள் என்றாலே அங்கு ஃபேஷன் மற்றும் ஆடம்பரத்திற்குப் பஞ்சம் இருக்காது....

12 1
பொழுதுபோக்குசினிமா

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா திருமணம்: பிரதமர் மோடி நெகிழ்ச்சி வாழ்த்து!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் திருமணத்தை முன்னிட்டு,...