Sunny Leones
சினிமாபொழுதுபோக்கு

கவர்ச்சி நடிகை சன்னி லியோன் மன்னிப்புக் கேட்க வேண்டும்!

Share

பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் இந்தியாவிலேயே இருக்க முடியாது என எச்சரித்து வருகின்றனர்.

பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன் வெளியிட்டுள்ள நடன வீடியோ ஒன்று இந்து மதத்தை அவமதிப்பதாக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

1960 ஆம் ஆண்டு எஸ்.யூ சன்னி இயக்கத்தில் வெளியான திரைப்படம் கோஹினூர். இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘மதுபான் மெய்ன் ராதிகா நாச்சே’ என்ற பாடலுக்கு நடனமாடி நடிகை சன்னி லியோன் சமீபத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

இதனைத் தடைசெய்யுமாறு கோரி, பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த விவகாரம் குறித்து உத்தரப்பிரதேசம் மதுராவை சேர்ந்த தலைமை மத குருவான சந்த் நாவல் கிரி மகராஜ் கூறியதாவது:-

கிருஷ்ணர் – ராதையின் காதலை பேசும் ‘மதுபான் மெய்ன் ராதிகா நாச்சே’ பாடலுக்கு நடிகை சன்னி லியோன் ஆபாச நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார்.

இந்த நடனமானது, இந்துக்களின் மனதை புண்படுத்தியுள்ளது. அந்த பாடலை அரசு உடனே தடை செய்ய வேண்டும். சன்னி லியோன் பொதுவில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

மன்னிப்புக்கேட்காமல் விட்டால், அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம். அவர் இந்தியாவிலேயே இருக்க முடியாது.

#CinemaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Moviej
சினிமாசினிமா

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் முன்பதிவுகள் ஆரம்பம்.

தற்போது, சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு ஆரம்பமாகியுள்ளது. இயக்குநர்...

idayam murali
சினிமா

ஓடிடி தளத்தில் வெளியாகும் இதயம் முரளி.

நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்று தெரிந்துகொள்ள ஆவலோடு...

Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...