7 3 scaled
சினிமாசெய்திகள்

படத்தை நிறுத்திவிட்டு பணத்தை திருப்பி கொடுக்க வந்த ரஜினி.. இயக்குனர் ஷங்கர் செய்த விஷயம்

Share

படத்தை நிறுத்திவிட்டு பணத்தை திருப்பி கொடுக்க வந்த ரஜினி.. இயக்குனர் ஷங்கர் செய்த விஷயம்

படத்தை நிறுத்திவிட்டு பணத்தை திருப்பி கொடுக்க வந்த ரஜினி.. இயக்குனர் ஷங்கர் செய்த விஷயம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் உருவான திரைப்படம் 2.0.

இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து இருந்தது. 2010ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படம் எந்திரன். இதனுடைய இரண்டாவது பாகமாக தான் 2.0 உருவானது.

இப்படத்தில் முதன் முதலில் ரஜினியுடன் இணைந்து ஹாலிவுட் நடிகர் அர்னால்டு நடிக்கவிருந்தார். ஆனால், அவரால் நடிக்கமுடியாமல் போக கமல் ஹாசனை தேர்வு செய்துள்ளனர். பின் அவராலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க முடியாமல் போக இறுதியாக தான் அக்ஷய் குமாரை வில்லன் ரோலில் நடிக்கவைத்துள்ளனர்.

இந்த நிலையில், 2.0 படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த நேரத்தில் ரஜினியின் உடல்நிலை காரணமாக படத்தில் நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 20% சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் ரஜினி இப்படத்திலிருந்து விலகிவிடலாம் என முடிவு செய்துள்ளார். இதுவரை தயாரிப்பு நிறுவனம் செய்த செலவிற்கான தொகையை கொடுத்து விடுகிறேன் என்றும் அவரே கூறியுள்ளார்.

ஆனால், இயக்குனர் ஷங்கர் கதையில் சில மாற்றங்களை கொண்டு வந்து ரஜினிக்கு சிரமம் கொடுக்காமல் படத்தில் நடிக்க வைத்துள்ளார். இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் அந்தணன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share
தொடர்புடையது
images 5 5
செய்திகள்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: அமைதியின்மை குறித்துப் பொலிஸ் அறிக்கை – “சமாதானத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் அகற்றினோம்” என விளக்கம்!

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை அகற்றியமை...

images 4 6
செய்திகள்இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: வீட்டு வன்முறை உச்சம்!

2024 நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் வரை மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள்...

images 3 6
செய்திகள்இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிப்பு!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பருத்தித்துறை நீதிமன்றம் 10...

MediaFile 3 4
சினிமாபொழுதுபோக்கு

நடிகை கீர்த்தி சுரேஷ் யுனிசெஃப் இந்தியாவின் தூதராக நியமனம்: “குழந்தைகள் தான் நம் எதிர்கால நம்பிக்கை”

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென் இந்திய மொழிகளில் முன்னணி நடிகையாகத் திகழும் கீர்த்தி சுரேஷ்,...