சினிமாசெய்திகள்

அந்த விஷயத்திற்காக ரஜினியிடம் அடம் பிடித்த பிரபல நடிகை.. இன்று வரை கோபத்தில் இருக்கிறாராம்

Share
5 3 scaled
Share

அந்த விஷயத்திற்காக ரஜினியிடம் அடம் பிடித்த பிரபல நடிகை.. இன்று வரை கோபத்தில் இருக்கிறாராம்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உலகளவில் தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள நட்சத்திரம் ஆவார். இவர் நடிப்பில் இதுவரை பல சூப்பர்ஹிட் மற்றும் இண்டஸ்ட்ரி ஹிட் திரைப்படங்கள் வந்துள்ளது. அதில் ஒன்று தான் படையப்பா.

இப்படம் வெளிவந்து 25 ஆண்டுகளை கடந்துள்ளது. உலகளவில் ரூ. 61 கோடிக்கும் மேல் வசூல் செய்த இப்படத்தை இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் இயக்கியிருந்தார்.

இந்த நிலையில், மாபெரும் வெற்றியடைந்த படையப்பா படத்தின் கதையை, நடிகை மீனாவிடம் ஒரு முறை கூறியுள்ளாராம் ரஜினிகாந்த். அவருக்கு நல்ல ஸ்டோரி சென்ஸ் இருக்கிறது என்ற காரணத்தினால் இப்படி செய்துள்ளார். கதையை கேட்ட நடிகை மீனா ‘நான் நீலாம்பரி கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்’ என கூறினாராம்.

ஆனால், ரஜினிகாந்த் ‘அது வில்லி கதாபாத்திரம், உங்க இன்னசண்ட் முகத்திற்கு செட் ஆகாது மீனா. நீங்க வேணும்னா ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடிங்க’ என கூறிவிட்டாராம். ரஜினிகாந்த் சொல்லியும் கேட்காமல் நீலாம்பரி கதாபாத்திரத்தில் தான் நடிப்பேன் என அடம்பிடித்துள்ளாராம்.

அதன்பின் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் பேசி புரியவைத்துள்ளார். பின் அந்த கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்தார். அந்த கதாபாத்திரம் தனக்கு கொடுக்கவில்லை என, என் மீது இன்று வரை மீனாவிற்கு கோபம் இருக்கிறது என்று விழா மேடை ஒன்றில் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.

 

Share
Related Articles
31
சினிமா

சிம்பு-தனுஷுடன் ரொமான்ஸ் செய்ய நான் ரெடி.. பிரபல தொகுப்பாளினி ஒபன் டாக்

ரஜினி-கமல், அஜித்-விஜய் அடுத்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் சிம்பு-தனுஷ். ரசிகர்கள் போட்டிபோட்டுக் கொண்டாலும் அவர்கள் நட்பாக தான்...

35
சினிமா

டிடி-யை உடை மாற்ற சொன்ன நடிகை.. நயன்தாரா தானா? முதல் முறையாக சொன்ன டிடி

தமிழில் பிரபல தொகுப்பாளராகி இருப்பவர் டிடி. அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது என தெரியவேண்டியது...

32
சினிமா

12 பிரபலங்களுடன் டேட்டிங்.. 50 வயதாகியும் திருமணம் செய்துக்கொள்ளாமல் இருக்கும் நடிகை

சினிமாவில் காதல் சர்ச்சையில் சிக்காமல் தப்பித்தது சிலராக மட்டுமே இருக்க முடியும். அதுவும் பாலிவுட் திரையுலகம்...

33
சினிமா

அஜித் ஒரு குட்டி எம்ஜிஆர்.. AK குறித்து மனம் திறந்து பேசிய பிரபலம்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் அஜித். சமீபத்தில் குட் பேட் அக்லி எனும்...