லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் அடுத்த படத்தில் நடிகர் கவின் நடிக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இத் தகவல் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கவின் நடிப்பில் அண்மையில் வெளியான ‘லிப்ட்’ திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றுள்ளது.
இந்த நிலையில், நயன்தாராவின் அடுத்த படத்தில் கவின் இணைய உள்ளார் என தகவல்கள் வெளிவந்துள்ளன.
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் ரவுடி பிக்சர்ஸ் சார்பில் இப் படத்தில் வாணிபோஜன் ஹீரோயினாக நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் ஏற்கனவே ‘கூழாங்கல்’, ‘நெற்றிக்கண்’ ஆகிய வெற்றிப்படங்களைத் தயாரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment