10 9 scaled
சினிமாசெய்திகள்

காரி துப்பமாட்டாங்கனு நினைக்கிறேன்! உண்மையை உடைத்த லோகேஷ் அப்பா என் லிரிக்ஸ் கொஞ்சம் திருடிட்டாரு- சுருதிஹாசன்!

Share

காரி துப்பமாட்டாங்கனு நினைக்கிறேன்! உண்மையை உடைத்த லோகேஷ் அப்பா என் லிரிக்ஸ் கொஞ்சம் திருடிட்டாரு- சுருதிஹாசன்!

சினிமாவில் தனக்கென ஒரு தனி பாணியில் இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவரும் கமலஹாசனின் மகளான சுருதிகாசனும் இணைந்து நடிக்கும் ஆல்பம் சோங் ஆனது நாளை வெளியாக உள்ளது. இந்த நிலையில் அது தொடர்பான பேட்டி ஒன்றை இருவரும் இணைந்து வழங்கியுள்ளனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்குனராக மட்டும் இன்றி நடிகராகவும் ஒரு புதிய பயணத்தை ஆரம்பித்துள்ளார். நடிகை சுருதிகாசனுடன் இணைந்து “இனிமேல்” என்ற ஆல்பம் சோங் இல் நடித்து வருகிறார் “ராஜ் கமல்” நிறுவனம் தயாரிக்கும் இந்த பாடலுக்கு கமலஹாசன் வசனம் எழுதி உள்ளார். இந்த நிலையிலேயே இந்த பாடல் தொடர்பாக சிறப்பு கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

அதில் லோகேஷ் “நான் நடிப்பை பற்றி ஜோசித்ததே இல்லை , எனக்கு ஆர்வமும் இல்லை ஆனால் ராஜ் கமல் கேட்க்கும் போது என்னால் NO சொல்ல முடியாது. முதல்ல சுருதி கதையை சொல்லும்போது நான் சிரிச்சுட்டேன் ஆனா போக போக எனக்கு இந்த மொத்த குழுவும் பிடிச்சுருக்கு , மக்கள் காரி துப்பாத அளவுக்கு பண்ணிருக்கன் என்று நினைக்குறேன்” என்று கூறியுள்ளார்.

மற்றும் சுருதிகாசன் “நான் இந்த சோங்ஐ முதல்ல இங்லிஷ்லதான் எழுதி இருந்தேன் அப்பறமாத்தான் நான் அப்பாகிட்ட காட்டினேன் அப்பதான் அவர் தமிழ்ல எழுதினார் என்னோட லிரிக்ஸ் கொஞ்சம் பிடிச்சு போனதால அதையும் சேத்துக்கிட்டாரு” என்றும் கூறியுள்ளனர்.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...