tamilni Recovered Recovered 3 scaled
சினிமாசெய்திகள்

என்னால் இங்க ஒருநாள் கூட இருக்க முடியாது.. கண்ணீர் விட்டழுத பவா செல்லத்துரை

Share

என்னால் இங்க ஒருநாள் கூட இருக்க முடியாது.. கண்ணீர் விட்டழுத பவா செல்லத்துரை

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 7 கடந்த 1-ஆம் தேதி முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பரப்பாகி வருகிறது. இந்த சீசனில் இரண்டு வீடுகள், எவிக்‌ஷன், நாமினேஷன் உள்ளிட்ட பல சுவாரசிய சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன.

இந்த சீசனில் நடிகர் கூல் சுரேஷ், யுகேந்திரன், நடிகை விசித்ரா, பிரபல எழுத்தாளர் பவா செல்லத்துரை, நடிகை மாயகிருஷ்ணா உள்ளிட்டோர் போட்டியாளர்களாக இடம் பெற்றுள்ளனர். அந்தவகையில் நேற்றைய நாமினேஷனில் அனன்யா வெளியேறியதைத் தொடர்ந்து இன்றைய தினம் நெஞ்சுவலி காரணமாக பவா செல்லத்துரை வெளியேறி உள்ளனர்.

இந்நிலையில் இவர் பிக்பாஸிடம் கண்ணீர் விட்ட வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது. அதில் பவா செல்லத்துரை “இப்போதுதான் இந்த விளையாட்டை புரிந்து கொண்டதாகவும் இனிமேல் ஒரு நாள் கூட இங்கு என்னால் இருக்க முடியாது” என்று கூறிக் கண் கலங்குகின்றார்.

அதற்கு பிக்பாஸ் “என்ன காரணம்” என்று கேட்க, பதிலுக்கு பவா செல்லத்துரை “மனித மனதின் குரூரங்கள் வெளிப்படுவதாலும் ஒரு சதவீதம் கூட என்னால் இங்கு நீடிக்க முடியாது. நெஞ்சு வலிக்கிறது” என்றும் கூறியிருக்கிறார் பவா.

இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் எவ்வளவோ அறிவுரை கூறியும் தன்னால் முடியாது எனக்கூறியமையால் பவா செல்லத்துரையை வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளனர்.

Share
தொடர்புடையது
world 183
செய்திகள்உலகம்

ஈரான் – அமெரிக்கா இடையே தொடரும் ரகசிய செய்திப் பரிமாற்றம்: பாகிஸ்தான் தூதுக்குழு இன்று தெஹ்ரான் வருகை!

கடந்த ஞாயிற்றுக்கிழமை இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற நேரடிப் பேச்சுவார்த்தைகள் எவ்வித உடன்பாடும் இன்றித் தோல்வியடைந்த போதிலும், தெஹ்ரானுக்கும்...

world 182
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு ஆசிகளைப் பெற்றார் ஜனாதிபதி: மகாநாயக்க தேரர்களுடன் விசேட சந்திப்பு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நேற்று (ஏப்ரல் 15)...

world 180
செய்திகள்உலகம்

உலக நிதிச் சந்தைகளுக்கு எச்சரிக்கை: மத்திய கிழக்கு போரினால் அதிகரிக்கும் அபாயங்கள்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல், உலகளாவிய நிதி நிலைத்தன்மைக்கு (Global Financial Stability) முன்னெப்போதும்...

world 179
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லவாயவில் பயங்கரம்: காதலனால் இளம் பெண் வெட்டிக்கொலை!

வெல்லவாய, நெட்டோலகம பகுதியில் 32 வயதுடைய திருமணமான பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொடூரமான...