சினிமாசெய்திகள்

அம்மா மீது அவ்வளவு வெறுப்பா? வனிதாவின் மகன் செய்த காரியம்?

tamilni Recovered 27 scaled
Share

அம்மா மீது அவ்வளவு வெறுப்பா? வனிதாவின் மகன் செய்த காரியம்?

தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய நடிகையாக காணப்படுபவர் தான் வனிதா விஜயகுமார்.

தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகர்களான விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகள் தான் வனிதா. இவர் விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்

அதைத்தொடர்ந்து இவர் சில படங்களில் மட்டும் தான்நடித்தார். அதன் பின் சினிமாவிலிருந்து விலகினார்.

இதை அடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அத்துடன் பிக் பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றும் இருந்தார். ஆனால் இவருக்கும்  நிகழ்ச்சி நடுவராக இருந்த ரம்யா கிருஷ்ணனுக்கும் இடையில் மனஸ்தாபங்கள் ஏற்பட பின்னர் இவர் அதில் இருந்து பாதியில்  விலகினார்.

இதை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்த வனிதா சீரியல்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என எதையும் விட்டு வைக்காமல்  கடும் பிசியாக இருந்து வந்தார்.

வனிதாவின் குடும்ப வாழ்க்கை தோல்வியைத்தான் சந்தித்தது. ஏற்கனவே ரெண்டு முறை திருமணம் ஆனபோதிலும் மூன்றாவது திருமணமும் தோல்வியில் தான் முடிந்தது.

கடந்த 2000 ஆண்டு ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட வனிதாவுக்கு ஸ்ரீஹரி என்ற மகனும் ஜோவிகா என்ற மகளும் பிறந்தார்கள்.

நன்றாக சென்ற இவர்களது திருமண வாழ்க்கை கடந்த 2005 ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது. அதன் பின் தனக்கு மகனைத் தருமாறு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஆகாஷ்.

இந்த நிலையில் வனிதா தனது மகனுடன் கொஞ்சி விளையாடிய வீடியோ ஒன்று மீண்டும் வைரலாகி வருகிறது.

இதன் போது வனிதாவின் மகன் ஸ்ரீஹரி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அதிரடியாக பதிலளித்துள்ளார்.

அதாவது, ரசிகர் ஒருவர் ஸ்ரீஹரியிடம் வனிதாவோட பையனா நீங்க? என்று கேட்க, அதற்கு ஸ்ரீஹரி நான் ஆகாஷ்ட பையன் ப்ரோ என்று கூறியுள்ளார்.

இதன் மூலம் தனக்கும் வனிதாவுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்பதை உறுதி செய்துள்ளார்.

Share
Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...