25 68453b76d4fcc
சினிமாசெய்திகள்

நடிகை கவுதமியின் வீட்டின் அருகே வேலை பார்த்த அஜித்.. இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா, இதோ

Share

இந்த ஆண்டு அஜித் நடிப்பில் மொத்தம் இரண்டு திரைப்படங்கள் வெளிவந்துள்ளது. அதில் விடாமுயற்சி திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. ஆனால், குட் பேட் அக்லி திரைப்படம் ப்ளாக் பஸ்டர் வெற்றியடைந்துள்ளது.

உலகளவில் ரூ. 285 கோடிக்கும் மேல் வசூல் அள்ளி, அஜித்தின் கரியர் பெஸ்ட் திரைப்படமாக GBU மாறியுள்ளது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் அஜித் – ஆதிக் கூட்டணி இணையவுள்ளது.

ஆம், விரைவில் இப்படத்திற்கான அறிவிப்பு வெளிவரும் என கூறப்படுகிறது. மேலும் செப்டம்பர் மாதத்தில் இருந்து இப்படத்திற்கான படப்பிடிப்பு துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித் குறித்து திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது கருத்துக்களை பேட்டிகளில் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், பிரபல நடிகை கவுதமி சமீபத்திய பேட்டி ஒன்றில் அஜித் குறித்து பேசியது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

அஜித் குறித்து பேசிய நடிகை கவுதமி, “ஆரம்ப காலகட்டத்தில் என் வீட்டின் அருகில் தான் அஜித் வேலை பார்த்து கொண்டிருந்தாராம். இதை அவர்தான் என்னிடம் ஒருமுறை சொன்னார். இன்று அஜித் சினிமாவிலும் விளையாட்டிலும் ஜெயித்ததை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் குடும்பம், சினிமா, விளையாட்டு என தனித்தனியாக பிரித்து எல்லாவற்றிலும் வெற்றி பெறுகிறார். அவர் உழைத்து முன்னேற வேண்டும் என நினைப்பவர்களுக்கு ஒரு முன் உதாரணமாக இருக்கிறார்” என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...