25 6844fcdb271cf
சினிமாசெய்திகள்

மூன்று நாட்களில் உலகளவில் தக் லைஃப் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

Share

நாயகன் தமிழ் சினிமாவில் ஆகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாகும். மணி ரத்னம் – கமல் கூட்டணியில் உருவான இப்படம் இன்று வரை அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. நாயகன் வெற்றியை தொடர்ந்து இருவரும் எப்போது மீண்டும் இணைவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

38 ஆண்டுகள் கழித்து தக் லைஃப் திரைப்படத்திற்காக இந்த வெற்றி கூட்டணி மீண்டும் இணைந்தது. இதனால் தக் லைஃப் படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பு உண்டானது. இவர்களுடைய கூட்டணி மட்டுமின்றி முதல் முறையாக கமலுடன் சிம்பு இணைந்து நடித்தாலும் படத்தை ஆவலுடன் திரையில் காண ரசிகர்கள் காத்திருந்தனர்.

கடந்த ஜூன் 5ம் தேதி திரைக்கு வந்த தக் லைஃப் திரைப்படம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்தது. ஒரு பக்கம் மோசமான விமர்சனம் இப்படத்திற்கு கிடைக்க, மறுபக்கம் நெட்டிசன்கள் இப்படத்தை ட்ரோல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், மூன்று நாட்களை பாக்ஸ் ஆபிசில் கடந்திருக்கும் தக் லைஃப் திரைப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 67 கோடி வசூல் செய்துள்ளது. முதல் நாளில் நல்ல வசூல் வந்த நிலையில், அடுத்த இரண்டு நாட்களில் அப்படியே குறைந்துவிட்டது.

Share
தொடர்புடையது
yyyyy
உலகம்செய்திகள்

ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் எச்சரிக்கை! அமெரிக்காவின் ஆதரவு குறித்து ட்ரம்பின் நிலைப்பாடு

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதட்டமான மோதலுக்கு மத்தியில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “(அமெரிக்கா) மோதலில்...

5 4
இலங்கைசெய்திகள்

நீதியரசர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ள மேல் நீதிமன்ற நீதிபதிகள்!

மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக இரண்டு, மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை, ஒப்புதல் அளித்துள்ளது....

4 5
இலங்கைசெய்திகள்

அதிகரிக்கும் போர் பதற்றம் : ஈரானின் மேலும் ஒரு புலனாய்வு தலைவரும் பலி

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் புலனாய்வு தலைவர் முகமட் ஹசேமி நேற்று(15) தெஹ்ரானில் உள்ள அவர்களின்...

3 5
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையின் மேயர் தெரிவில் கடும் குழப்ப நிலை

கடந்த மே 6ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலைத் தொடர்ந்து, புதியதாக தெரிவுசெய்யப்பட்ட கொழும்பு மாநகர...