விஜய் டிவி ரசிகர்களை அதிகம் கவர்ந்த ஷோவான குக் வித் கோமாளியின் அடுத்த சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது.
இந்த ஆறாவது சீசனில் போட்டியாளர்களாக யாரெல்லாம் வர போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு அதிகம் இருக்கிறது. மே 4ம் தேதி ஒளிபரப்பு தொடங்கும் நிலையில் லேட்டஸ்ட் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
தற்போது புது ப்ரோமோ வெளியிட்டு போட்டியாளர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது விஜய் டிவி.
லட்சுமி ராமகிருஷ்ணன், ஷபானா ஷாஜஹான், பிரியா ராமன், உமர் லத்தீப் ஆகியோர் போட்டியாளர்களாக வருவது உறுதி ஆகி இருக்கிறது.