டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை காலிஸ்தான் தீவிரவாதிகள் என்று நடிகை கங்கனா ரனாவத் விமர்சனம் செய்திருந்தார்.
இந்த விடயமானது பல்வேறு தரப்பினரின் கடும் கண்டத்திற்கு உள்ளானது. அவர் மீதும் பல்வேறுபட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.
மேலும் இவர்மீது தொடர்ந்து பொலிசில் புகார்கள் செய்யப்பட்டு, வழக்கு தொடரப்பட்டு வருகிறது. அரசியல் கட்சிகளிடம் இருந்து இவருக்கு அச்சுறுத்தல்கள் தொடர்வதாக கூறப்படுகிறது.
தற்போது இந்த விவகாரத்தில் இருந்து, தன்னை விடுவித்துக் கொள்வதற்காக, பல ஆலயங்களில் ஏறி இறங்கி வழிபாடுகளை மேற்கொண்டு வருகிறார்.
சமீபத்தில் ராகு -கேது கோயிலிலும் வழிபாடு மேற்கொண்டு தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படம் பகிர்ந்துள்ளார்.
அந்தப் பதிவில், தன்னுடைய அன்பிற்குரிய எதிரிகளுக்காக தான் பிரார்த்தனை செய்துள்ளதாகவும் இவ்வாண்டு தன்மீது குறைவான புகார்கள் காணப்படவும், அதிகமாக லவ் லெட்டர்கள் இருக்கவும் தான் பிரார்த்தனை செய்ததாகவும் பதிவிட்டுள்ளார்.
இப்பதிவிற்கும் பலரும் தனது கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
#CinemaNews
Leave a comment