07 வருடங்களுக்குப் பின்னர் நடிகையின் ரீ-என்ட்ரி!-

Honey

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார் பிரபல நடிகை ஹனிரோஸ்

பாய் பிரண்ட் என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஹனிரோஸ். இவர் தமிழில் முதல் கனவே என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு சிங்கம்புலி, மல்லுக்கட்டு படங்களில் நடித்தார். கடைசியாக 2014ம் ஆண்டு காத்தவராயன் படத்திலும் நடித்திருந்தார்.

இந்த நிலையில், தற்போது 7 ஆண்டுகளுக்கு பிறகு புதிய படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதில் அவர் சுந்தர்.சிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

சைக்கோ திரில்லர் கதையான இதில் சுந்தர்.சி பொலிஸ் அதிகாரியாகவும், ஹனிரோஸ் பத்திரிகை நிருபராகவும், ஜெய் சைக்கோ கொலைகாரனாகவும் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#CinemaNews

Exit mobile version