சினிமா
விஜய் ஆண்டனி தந்தையும் தற்கொலை செய்துகொண்டாரா!! அதிர்ச்சி தகவல்
விஜய் ஆண்டனி தந்தையும் தற்கொலை செய்துகொண்டாரா!! அதிர்ச்சி தகவல்
இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த செய்தி அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
12ஆம் வகுப்பு படித்து வரும் மீரா மன அழுத்தம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என தகவல் வெளிவந்தது.
இந்நிலையில், விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை செய்துகொண்டுள்ள இந்த நேரத்தில் தனது தந்தை குறித்து விஜய் ஆண்டனி பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதில், தனது தந்தை தனக்கு 7 வயது இருக்கும் போது தற்கொலை செய்துகொண்டார். வாங்காத கடனுக்காக அவர் தற்கொலை செய்துகொண்டார் என மிகவும் உருக்கமாக பேசியுள்ளார் விஜய் ஆண்டனி.