சினிமா
நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு! எத்தனை கோடி தெரியுமா?
நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு! எத்தனை கோடி தெரியுமா?
தந்தை, அண்ணன் உதவியுடன் சினிமாவில் அறிமுகமானாலும் நாயகன் என்ற பெயர் எடுக்கவே பல கஷ்டங்களை அனுபவித்தவர் தனுஷ்.
ஆரம்பத்தில் இவரை ஏற்றுக்கொள்ளாத சினிமாவில் தனது முழு திறமையை வெளிக்காட்டி இப்போது இவர் பெயர் அடிபடாத நிகழ்ச்சியே இல்லை என்ற அளவிற்கு வளர்ந்துவிட்டார்.
கோலிவுட்டை தாண்டி பாலிவுட், ஹாலிவுட் என சாதனை நிகழ்த்தியுள்ளார் தனுஷ். நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர் மற்றும் பின்னணி பாடகர் என பன்முகத் திறமை கொண்ட நடிகர் தனுஷின் நடிப்பில் அடுத்து கேப்டன் மில்லர், D50 படங்கள் வெளியாக இருக்கின்றன.
கடந்த சில ஆண்டுகளாகவே தனுஷின் சொத்து மதிப்பு உயர்ந்துகொண்டே வருகிறது. ஃபோர்ப்ஸ் இந்தியா பிரபலங்கள் 100 பட்டியவில் தனுஷ் 6 முறை இடம் பெற்றிருக்கிறார். தனுஷ் தற்போது ரூ. 20 முதல் 30 கோடி வரை சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.
தயாரிப்பு நிறுவனம் Wunderbar Films மூலம் இதுவரை 19 படங்களை தயாரித்துள்ளார், இதன்மூலம் நிறைய லாபத்தையும் பெற்றுள்ளார்.
நடிகர் மற்றும் இயக்குனரான சசிகுமாரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?- இதோ முழு விவரம்
நடிகர் மற்றும் இயக்குனரான சசிகுமாரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?- இதோ முழு விவரம்
ரூ. 150 கோடி செலவில் போயஸ் கார்டனில் தனுஷ் ஒரு சொகுசு வீடும் கட்டியுள்ளார்.
ரூ. 45 லட்சம் மதிப்புள்ள Jaguar XE, ரூ. 75 லட்சம் மதிப்புள்ள Ford Mustang, ரூ. 1.65 கோடி விலையுள்ள Audi A8 உட்பட பல சொகுசு கார்களை அவர் வைத்திருக்கிறார். இவை தவிர ரூ. 3.40 கோடி) மதிப்புள்ள Bentley Continental Flying Spur மற்றும் ரூ. 7 கோடி மதிப்புள்ள Rolls Royce Ghost , ரூ.1.50 கோடி மதிப்புள்ள Range Rover Sport HSE’ ரூ. 1.42 கோடி மதிப்புள்ள Mercedes-Benz S-Class S350 ஆகிய ஆடம்ப கார்களையும் தனுஷ் வைத்திருக்கிறார்.
மொத்தமாக நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு ரூ. 250 முதல் ரூ. 300 கோடி வரை இருக்கும் என்கின்றனர்.