சினிமா
சித்தார்த் அபிமன்யுவை மிஞ்சும் நடிகர்!.. தனி ஒருவன் 2 அப்டேட்
சித்தார்த் அபிமன்யுவை மிஞ்சும் நடிகர்!.. தனி ஒருவன் 2 அப்டேட்
நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் 2015 -ம் ஆண்டு வெளியான தனி ஒருவன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
இப்படம் ஜெயம் ரவி னிமா வாழ்க்கையில் முக்கியமானதொரு படமாக அமைந்தது. தனி ஒருவன் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமே வில்லன் சித்தார்த் அபிமன்யு என்றே சொல்லலாம். இந்த கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமி நடித்திருப்பார்.
சமீபத்தில் தனி ஒருவன் 2 -ம் பாகத்தின் அறிவிப்பை படக்குழு வெளியிட்டது. இந்நிலையில் இப்படத்தில் யார் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.
தற்போது தனி ஒருவன் 2 வில், சென்சேஷனல் நடிகராக வலம் வரும் பகத் பாசில் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.