சினிமா
தனி ஒருவன் 2 படத்தின் வில்லன் யார் தெரியுமா..
தனி ஒருவன் 2 படத்தின் வில்லன் யார் தெரியுமா..
எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளிவந்து அனைவரையும் அசரவைத்து தமிழ் திரைப்படங்களில் ஒன்று தனி ஒருவன். மோகன் ராஜா இயக்கிய இப்படத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த் சாமி என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
இப்படம் இயக்குனராக மோகன் ராஜாவிற்கு, நடிகர்களாக ஜெயம் ரவி மற்றும் அரவிந்த் சாமிக்கும் மாஸ் கம் பேக் கொடுத்தது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்தனர்.
அதன்படி, 8 வருடங்களுக்கு பின் ஏ ஜி எஸ் நிறுவனத்தில் இருந்து தனி ஒருவன் 2 படத்தின் அறிவிப்பு வெளிவந்தது. மோகன் ராஜா – ஜெயம் ரவி – நயன்தாரா மீண்டும் இப்படத்திற்காக இணைந்துள்ளனர்.
ஆனால், முதல் பாகத்தில் அரவிந்த் சாமி கதாபாத்திரம் இறந்துவிட்டதால், இரண்டாவது பாகத்தில் அவருக்கு நிகரான நடிப்பை யார் கொடுக்க போகிறார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்நிலையில், தனி ஒருவன் 2 படத்தில் வில்லனாக பகத் பாசில் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இவர் கண்டிப்பாக அரவிந்த் சாமியின் நடிப்புக்கு நிகரான நடிப்பை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பு தயாரிப்பு நிறுவனம் வெளியிடுகிறதா என பொறுத்திருந்து பார்ப்போம்.