Screenshot 20211013
சினிமாபொழுதுபோக்கு

கும்கி நாயகி புது அவதாரம்

Share

கும்கி படத்தில் அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக மாறியவர் லட்சுமி மேனன்.

சுந்தரபாண்டியன், பாண்டியநாடு, நான் சிவப்பு மனிதன், மஞ்சப்பை, வேதாளம், மிருதன் உள்ளிட்ட பல படங்களில் இதுவரை நடித்துள்ளார்.

2016 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி ஜோடியாக  றெக்க படத்தில் நடித்த பின்னர், மீண்டும்  படிப்பை தொடர்ந்தார்.

இதன்பின்னர் படங்களில் நடிப்பதில் பின்னடிப்பை காட்டினார்.

புலிக்குத்தி பாண்டி என்ற படத்தில் சில வருடங்களுக்கு முன்னர் தலைகாட்டினார். இந்நிலையில் ‘ஏஜிபி‘ என்ற படத்தில் தற்போது  நடிக்கிறார்.

திகில் கதையம்சம் உள்ள படமாக இந்தப் படம் தயாராகிறது.

வணிக ரீதியிலான படங்களில் நடித்த லட்சுமி மேனன் முதல் தடவையாக இந்த படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் சவாலான மனநோயாளி கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரு பெண்ணுக்குள் மூன்று கதாபாத்திரங்கள் நுழைந்து பாதிப்புக்கு உள்ளாக்கும் கதாபாத்திரத்தில் லட்சுமி மேனன் நடிக்கவுள்ளார்.

இந்த படத்தை ரமேஷ் சுப்பிரமணியன் இயக்குகிறார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...