nayanthara vignesh shivan 1658395325
சினிமாபொழுதுபோக்கு

‘லேடி சூப்பர் ஸ்டார்’க்கு பிறந்த நாள் சர்ப்ரைஸ் – அறிவிப்பை வெளியிட்ட விக்னேஷ் சிவன்!

Share

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா வரும் 18ம் தேதி தனது 38வது பிறந்தநாளை கொண்டாட இருக்கும் நிலையில் பிறந்தநாள் சர்ப்ரைஸ் அறிவிப்பு ஒன்றை அவரது கணவரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் சற்று முன் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.

நயன்தாராவின் பிறந்த நாளான நவம்பர் 18ஆம் தேதி அவர் நடித்து வரும் ‘கனெக்ட்’ என்ற திரைப்படத்தின் டீசர் வெளியாக இருப்பதாக விக்னேஷ் சிவன் அறிவித்துள்ளார். மேலும் இந்த படத்தின் புதிய போஸ்டரை அவர் வெளியிட்டுள்ள நிலையில் இந்த போஸ்டர் வைரலாகி வருகிறது.

விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பதும் மேலும் இந்த திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அனுபம் கெர் மற்றும் சத்யராஜ் உட்பட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா நடித்த ’மாயா’ என்ற திரைப்படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கத்தில் இந்த படம் உருவாகி உள்ளது என்பதும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

#cinema

Share
தொடர்புடையது
09 5
சினிமாபொழுதுபோக்கு

‘சிக்கினி சமேலி’ பாடல் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரேயா கோஷல்: விளக்கம் என்ன?

இந்தியத் திரையுலகின் முன்னணிப் பின்னணிப் பாடகியான ஸ்ரேயா கோஷல், கடந்த சில நாட்களாகச் சமூக வலைத்தளங்களில்...

10 5
சினிமாபொழுதுபோக்கு

குழந்தை நட்சத்திரத்திலிருந்து பன்மொழி நாயகியாக சாரா அர்ஜுனின் வெற்றிப் பயணம்: நெகிழ்ச்சியில் இயக்குனர் விஜய்!

தமிழ் சினிமாவில் ‘தெய்வத்திருமகள்’, ‘சைவம்’ போன்ற திரைப்படங்கள் மூலம் குழந்தை நட்சத்திரமாக ரசிகர்களின் மனதை வென்றவர்...

07 3
சினிமாபொழுதுபோக்கு

துபாயில் நடிகர் அஜித் குமார் பாதுகாப்பாக இருக்கிறார்: போர் பதற்றத்தால் இந்தியா திரும்புவதில் தாமதம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தொழில்முறை கார் பந்தய வீரருமான அஜித் குமார் தற்போது துபாயில்...

16 1
பொழுதுபோக்குசினிமா

BTS ஜங்குக் நேரலையில் அதிர்ச்சித் தகவல்: ‘உயிருக்கு ஆபத்து’ என ரசிகர்களுக்குக் கவலை!

BTS குழுவின் நட்சத்திரக் கலைஞர் ஜங்குக், சமீபத்தில் நடைபெற்ற ஒரு சர்ச்சைக்குரிய நேரலை ஒளிபரப்பின் போது...