9 15
சினிமாபொழுதுபோக்கு

சந்தோசமாக வெளியேறிய ரவீந்தர்.. ஆனால் அவருக்காக கதறி அழுத ஒரே பெண் போட்டியாளர்!

Share

சந்தோசமாக வெளியேறிய ரவீந்தர்.. ஆனால் அவருக்காக கதறி அழுத ஒரே பெண் போட்டியாளர்!

பிக் பாஸ் 8வது சீசனில் இருந்து ரவீந்தர் தற்போது எலிமினேட் செய்யப்பட்டு இருக்கிறார். முதல் வாரம் எலிமினேஷன் இருக்குமா இருக்காதா என முதலில் குழப்பம் இருந்தாலும், நிச்சயம் எலிமிநேஷன் இருக்கும் பிக் பாஸ் குழு கூறி இருந்தது.

ஒவ்வொருவராக விஜய் சேதுபதி காப்பாற்றி வந்த நிலையில் இறுதியாக ரவீந்தர், ஜாக்குலின் மற்றும் ரஞ்சித் ஆகிய மூவர் மட்டுமே நாமினேஷன் லிஸ்டில் இருந்தனர்.

அதில் ரவீந்தர் எலிமினேட் ஆவதாக விஜய் சேதுபதி கார்டை காட்டி உறுதி செய்தார்.

எலிமினேஷன் தான் எதிர்பார்த்தது தான் என சொல்லி ரவீந்தர் சந்தோசமாக வெளியே கிளம்பினார்.

“இதெல்லாம் எனக்கு செட் ஆகாது டா..” என சொல்லி எமோஷ்னலாக பேசிய மற்ற போட்டியாளர்களையும் அவர் தடுத்தார்.

ரவீந்தர் சந்தோசமாக வெளியே சென்றாலும், ஜாக்குலின் மட்டும் கண்ணீர் விட்டு கதறினார். ‘நீங்க போயிருக்க கூடாது சார்’ என அவர் சொல்லி அழுதார்.

அதன் பிறகு அவரை சமாதானம் செய்த ரவீந்தர், மற்ற எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டு வெளியில் கிளம்பினார்.

Share
தொடர்புடையது
25 6937eda9b78ac
சினிமாபொழுதுபோக்கு

யாஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு: 2026 மார்ச் 19 அன்று ரிலீஸ்!

‘கே.ஜி.எஃப் 1’ மற்றும் ‘கே.ஜி.எஃப் 2’ படங்களின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு பான் இந்தியன் ஹீரோவாக...

25 6937ba28eed02
சினிமாபொழுதுபோக்கு

பிரதீப் ரங்கநாதனின் ‘LiK’ வெளியீடு தள்ளிப்போனது: பிப்ரவரி 13, 2026 இல் வெளியாக வாய்ப்பு!

தமிழ் சினிமாவின் இளம் வசூல் நாயகனாக மாறியுள்ள நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் அடுத்த பிரம்மாண்டத்...

சினிமாபொழுதுபோக்கு

ரன்வீர் சிங்கின் ‘துரந்தர்’ முதல் 3 நாட்களில் உலகளவில் ரூ. 160.15 கோடி வசூல்!

இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள ‘துரந்தர்’ (Durandhar) திரைப்படம், திரைக்கு வந்த...

3659285
சினிமாபொழுதுபோக்கு

எல்லோரையும் தொந்தரவு செய்யாதீர்கள்: மலேசிய கார் ரேஸில் ரசிகர்களுக்கு அஜித் வேண்டுகோள்!

நடிகர் அஜித்குமார் தற்போது மலேசியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கார் ரேஸ் போட்டியில் (Car Race) பங்கேற்றுள்ள...