முன்னாள் காதலிக்கு போன் போட்ட பிக்பாஸ் 7 ரன்னர் மணி.. ரூட்ட கொஞ்சம் மாத்துங்க தலைவா
திண்ணையில் இருந்தவனுக்கு திடீர்னு கிடைச்ச தான் அதிர்ஷ்டம் என்று கிராமப்புறங்களில் ஒரு பழமொழி சொல்வதுண்டு. அது இந்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மணி சந்திராவுக்கு தான் சரியாக பொருந்தும். பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் முகேன் எப்படி வின்னர் ஆனார் என்று எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்ததோ, அப்படித்தான் இந்த நிகழ்ச்சி இந்த சீசனில் மணி எப்படி ரன்னர் ஆனார் என்பதும் ஆச்சரியமாக இருக்கிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சி 50 நாட்கள் கடந்த நிலையிலும் மணி பெரிதாக பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. மௌன ராகம் சீரியல் மூலம் ரவீனா ஓரளவுக்கு ரசிகர்கள் கூட்டத்தை சேர்த்து வைத்திருந்ததால், மணி வெளியேறிவிட்டால் கண்டிப்பாக ரவீனா சிறப்பாக விளையாடுவார் என்றெல்லாம் அப்போது புரளி கிளப்பப்பட்டது. மணி இருப்பதால்தான் ரவீனா உள்ளே தாக்குப் பிடிக்கிறார் என்பதை புரிந்து கொள்ளவே நமக்கு நிறைய நாட்கள் ஆனது.
மணி அவ்வளவாக புள்ளி கேங் உடன் தன்னை இணைத்துக் கொள்ளாதது, சரியான சமயத்தில் நிக்சனை எதிர்த்து கேள்வி கேட்டது போன்றவை தான் நாமினேஷன் ஆன வாரங்களில் அவரை வீட்டிற்குள் தக்க வைத்தது. இருந்தாலும் மணி ஓவர் நைட்டில் ஒபாமா ஆனது எல்லாம் ரவீனாவின் ஃபாரின் ஆன்ட்டி உள்ளே வந்து ஆட்டத்தை கலைத்த பிறகு தான். உண்மையில் மணியின் வெற்றிக்கு காரணமே அந்த சம்பவம் தான்.
பிக் பாஸ் 7 நிகழ்ச்சி முடிந்த பிறகு மணியின் முன்னாள் காதலி பேசிய வீடியோ ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது. அதில் அவருடைய முன்னாள் காதலி பெலினா, மணியும் அவரும் பிரிந்ததற்கு காரணம் ரவீனா இல்லை என்றும், உண்மையில் தங்களுக்கும் எந்த விஷயமும் செட் ஆகாமல் அடிக்கடி சண்டை வந்தது தான் எங்களுடைய பிரிவுக்கு முக்கிய காரணம் என்றும் சொல்லியிருக்கிறார்.
மேலும் தங்களுக்குள் ஆழமான காதல் என்று ஒன்று இருந்ததில்லை எனவும், தொடக்கத்திலேயே இதெல்லாம் நமக்கு செட்டாகாது என நட்பிலேயே அதை முடித்துக் கொண்டதாகவும் சொல்லியிருக்கிறார். பெலினாவுக்கு நிச்சயதார்த்தமான போது நிறைய பேர் மணி ஏமாற்றியதால் தான் அவர் உடனே திருமணம் செய்து கொள்கிறார் என எண்ணி மணியை திட்டி தீர்த்ததாகவும் சொல்லி இருக்கிறார்.
அப்போது மணி ஃபெலினாவுக்கு போன் செய்து உனக்கு நிச்சயதார்த்தமானதற்கு நான் உன்னை ஏமாற்றியது தான் காரணம் என எல்லோரும் என்னை திட்டுகிறார்கள் என நகைச்சுவையாக சொன்னதாகவும் சொல்லி இருக்கிறார். உண்மையில் மணி, சாண்டி மாஸ்டர் அளவுக்கு வரவேண்டிய ஒரு நடன கலைஞர். ரவீனா உடன் சுற்றுவதை நிறுத்திவிட்டு தன்னுடைய திறமையில் கவனம் செலுத்தினால் கண்டிப்பாக வெற்றி பெறுவார். இதையெல்லாம் உணர்ந்து அவர் தன்னுடைய ரூட்டை மாற்ற வேண்டும்.
- bigg boss 7 tamil
- bigg boss 7 tamil full episode
- bigg boss 7 tamil memes
- bigg boss 7 tamil promo
- bigg boss 7 tamil title winner
- bigg boss 7 tamil update
- bigg boss 7 tamil winner
- bigg boss season 7
- Bigg Boss season 7 tamil
- bigg boss tamil
- bigg boss tamil 7
- bigg boss tamil season 7
- bigg boss tamil season 7 2024 tamil review
- bigg boss tamil season 7 today full episode
- biggboss season 7 tamil troll
- Tamil
- tamil shows
- tamil tv
- unseen bigg boss 7 tamil