5 25 scaled
உலகம்செய்திகள்

புலம்பெயர்தலை நிறுத்துங்கள் என்று சுவிஸ் மக்கள் சொல்லும் நிலை உருவாகலாம்

Share

புலம்பெயர்தலை நிறுத்துங்கள் என்று சுவிஸ் மக்கள் சொல்லும் நிலை உருவாகலாம்

புலம்பெயர்தலை நிறுத்துங்கள் என்று சுவிஸ் மக்கள் சொல்லும் ஒரு நிலை உருவாகலாம் என சுவிஸ் முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கூறியுள்ளார்.

சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த சுவிஸ் முன்னாள் ஜனாதிபதியும், ஆளும் சுவிஸ் பெடரல் கவுன்சில் உறுப்பினருமான Guy Parmelin, புலம்பெயர்தலை நிறுத்துங்கள் என்று சுவிஸ் மக்கள் சொல்லும் ஒரு நிலை உருவாகலாம் என்று கூறியுள்ளார்.

கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்றொரு பழமொழி உண்டு. அதுபோல, உலக நாடுகள் பல திறன்மிகுப் பணியாளர் தட்டுப்பாட்டால் அவதியுற்று வருகின்றன. அதே நேரத்தில், புலம்பெயர்வோர் தங்கள் நாடுகளுக்கு வருவதை அவை ஏற்க மறுக்கின்றன.

சுவிட்சர்லாந்திலும் அந்த நிலை காணப்படுகிறது. பல துறைகளுக்கு திறன்மிகுப் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால், புலம்பெயர்தலை மக்கள் எதிர்க்கிறார்கள்.

சுவிஸ் மக்களின் பிரதிநிதியாக, அவர்களுடைய எண்ணங்களைத்தான் தற்போது வெளிப்படுத்தியுள்ளார் Guy Parmelin.

இப்படியே புலம்பெயர்தல் தொடரமுடியாது என்று கூறியுள்ள அவர், சுவிட்சர்லாந்தில் வீடுகள் பற்றாக்குறைக்கு பாதிக்குப் பாதி புலம்பெயர்ந்தோர்தான் காரணம் என்கிறார்.

புலம்பெயர்தல், திறன்மிகுப் பணியாளர்கள் தட்டுப்பாட்டை தீர்க்க உதவுகிறது. ஆனால், இப்படியே தொடரமுடியுமா என்பதில் எனக்கு சந்தேகம் உள்ளது என்று கூறும் Guy Parmelin, ஒரு கட்டத்தில் சுவிஸ் மக்கள், புலம்பெயர்தல் போதும் என கூறுவார்கள் என தன்னால் உறுதியாகக் கூறமுடியும் என்கிறார்.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...