உடல் ஆரோக்கியம் பெற ரகசிய குறிப்புக்கள்
நவீன உலகில் அனைவரும் வேலை வேலை என்று ஓடிக் கொண்டிருக்கிறார்கள். உடலை கவனித்துக்கொள்ள போதுமான நேரத்தை எடுத்துக் கொள்வதில்லை.
நல்ல ஆரோக்கிய உடல்வாகுவை என்றும் பேணினால் மாத்திரமே முதுமை காலத்திலும் ஆரோக்கியமாக நோய்நொடியின்றி வாழலாம்.
இன்றைய இளைய தலைமுறையினர் உணவில் கட்டுபாட்டை ஏற்படுத்தி கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டால் நல்ல உடல் ஆரோக்கியத்தை பெற்று விடலாம் என்று நம்புகின்றனர். ஆனால் அது பிழையான எண்ணமாகும்.
சிறந்த உடல் ஆரோக்கியத்தைப் பெற சிற குறிப்புக்களை பின்பற்றினாலே மாற்றத்தை கண்கூடாக உணர்வீர்கள். அவை என்னவென பார்ப்போம்.
உணவை மென்று உண்ணுங்கள்
எந்த வகையாக உணவாக இருந்தாலும் உணவை நன்றாக மென்று உமிழ் நீருடன் கலந்துடன் அரைத்து பின் சாப்பிட வேண்டும். இவ்வாறு சாப்பிட்டால் உடலுக்கு தேவையான சக்தியும் ஜீரணமும் சீராக நடைபெறும்.
இதன் மூலம் நாளடைவில் நீங்கள் நல்ல மாற்றத்தை உடலில் உணர்வீர்கள். அத்துடன் உடல் எடையும் குறைந்து சீரான உடல் ஆரோக்கியத்தை பெறுவீர்கள்.
நார்ச்சத்து உணவை அதிகரியுங்கள்
உணவில் கொழுப்பு குறைந்த நார்ச்சத்துள்ள உணவுகளை சேர்த்துக் கொண்டால் அதிக சக்தியை தரும். அத்துடன் நீங்கள் சோர்வடையமாட்டீர்கள். முடிந்த வரை வாழைத்தண்டு, வாழைக்காய், வாழைப்பூ, கீரை, பீன்ஸ் போன்ற நார்ச்சத்து அதிகம் இருக்கும் உணவுகளை சேர்த்துக்கொள்ளுங்கள்.
தேவையானளவு நீர் அருந்துங்கள்
ஒரு நாளைக்கு ஒருவர் இவ்வளவு தண்ணீர்தான் குடிக்க வேண்டும் என்ற அளவு இல்லை. அவரவர் உடல் நிலைக்கு ஏற்றவாறு அருந்தலாம். மேலும் தாகம் எடுக்கும் போது தண்ணீர் குடிக்காமல் இருக்கக்கூடாது. முடிந்த வரை அதிக அளவு நீரைப் பருகுங்கள். இதனால் உடலிலுள்ள கழிவுகள் வெளியேறி உடல் ஆரோக்கியம் பெறுவதோடு சீரான எடையை தக்கவைத்துக் கொள்வீர்கள்.
நன்றாக உறங்க வேண்டும்
ஒருவரின் உடல் மன ஆரோக்கியத்துக்கு புத்துயிர் கொடுப்பது தூக்கமே. நல்ல தூக்கம் நோயை அண்டவிடாது. மன அழுத்தத்தை குறைத்து நிம்மதியான வாழ்க்கையை உண்டுபண்ணுகிறது. நல்ல தூக்கம் சரியான ஜூரணம் ஏற்பட உதவுகிறது. உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
சந்தோசமாக இருங்கள்
எப்போதும் வாழ்க்கையை மகிழ்ச்சியாக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் வருத்தப்படுவதால் எதுவும் உலகில் மாறிவிடப் போவதில்லை. அதனால் பிடித்த இசையை கேட்டு பிடித்த வேலையை பார்த்து மன அழுத்தத்தையும் கவலைகளையும் அண்டவிடாது மகிழ்ச்சியாக வாழ முயற்சியுங்கள்.
Leave a comment