MenopauseSymptoms ghgh
அழகுக் குறிப்புகள்

விரைவில் வயதாகிறதா? – கவலைய விடுங்க

Share

விரைவில் வயதாகிறதா? – கவலைய விடுங்க

வாழ்க்கையில் வயதாவது தவிர்க்க முடியாத ஒன்று. ஆனால் இன்றைய காலத்தில் விரைவிலேயே வயதாவது போன்ற தோற்றம் உண்டாகி விடுகிறது. இதனால் நீங்கள் கவலையில் உள்ளீர்களா? அதற்கு உங்கள் வாழ்க்கையை முறையை மாற்றியமைத்தாலே போதும். வயதாவதை தாமதப்படுத்திக் கொள்ளலாம்.
நீங்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டிய பழக்கவழக்கங்களை இங்கு பார்ப்போம்.

அதிகநேரம் ஸ்க்ரீன் பார்க்கக்கூடாது

phoneசருமம் தொய்வாக, வறண்டுபோய் விடுவதற்கு அதிக நேரம் நாம் தொடு திரைகளைப் பார்ப்பதால் ஏற்படுகிறது. அவற்றிலிருந்து வெளிவரும் நீல ஒளி முன்கூட்டிய வயதாவதைத் தூண்டுகிறது. இரவு நீண்ட நேரம் தூங்காமல் கண்விழித்து கைபேசிகளைப் பார்ப்பதோ தொலைக்காட்சிகளை பார்ப்பதோ தவிர்த்தல் அவசியம்.

 

 

சீரான தூக்கம் அவசியம்

sleepinh

 

சரியான நேரத்துக்கு தூங்காது இருப்பது உங்கள் வாழ்க்கையில் வயதாவதை தூண்டும் காரணியாகும். போதுமான தூக்கமின்மை உங்கள் தூக்கத்தை விரைவுபடுத்துவதோடு இருதய நோய்களையும் உண்டு பண்ணுகின்றது.

 

 

 

அதிக நீரை பருதல் வேண்டும்

water happy drink

 

தினமும் அவரவர் உடல் உழைப்புக்குத் தகுந்தாற்போல் நீரைப் பருக வேண்டும். நாளொன்றுக்கு குறைந்தது இரண்டு லீற்றர் நீரையாவது கட்டாயம் குடிக்க வேண்டும். நீர்த்தன்மை அதிகமுள்ள தர்ப்பூசணி, வெள்ளரிக்காய், தக்காளி போன்ற பழ வகையையும் உண்ணலாம். இதனால் உடலில் நீர்த்தன்மை குறைவடையாது பாதுகாக்கப்பட்டு முதுமை தடுக்கப்படும்.

 

அதிக நேரம் ஒரே இடத்தில் இருக்கலாகாது

Sitting ytutyuyu

ஒரே இடத்தில் உட்கார்ந்தே வேலை பார்க்கும் வாழ்க்கை முறைக்கு நாம் மாறிவிட்டோம். ஒரே இடத்தில் உட்கார்ந்து பணிபுரியும்போது எம் உடலில் உள்ள கலோரிகள் கரையாது கொழுப்புச் சத்தாக மாறிவிடுகிறது. இதனால் இதயத்தைச் சுற்றி கொழுப்புச் சத்து கூடி இதயம் சார்ந்த நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே சிறிது நேரத்துக்கு ஒருமுறை எழுந்து நடத்தல் வேண்டும்.

 

 

சத்துள்ள உணவுகளை உட்கொள்தல்

healthy eatingநார்சத்து மிகுந்த உணவு, காய்கறிகள், பழங்கள் இவற்றை அதிகம் உட்கொள்ளுதல் வேண்டும்.அதிக கொழுப்பு, துரித உணவு, எண்ணெய், காரம் போன்றவற்றை தவிர்த்து 80 சதவீத முறையான உணவுகளையும் 20 சதவீத பிடித்த உணவுகளையும் எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் கண்டிப்பாக உங்கள் உணவில் மீன் சேர்த்து கொள்ளுங்கள். இது உங்கள் செல்கள் வயதாகுவதை தடுப்பதோடு சருமத்துக்கு ஈரப்பதத்தையும் கொடுக்கிறது.

 

உடற்பயிற்சி அவசியம்

Girl Stretching 8888
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உடற்பயிற்சி செய்தல் அவசியம். வாரத்துக்கு 4 முறை உடற்பயிற்சி செய்தால் செல்களுக்கு இரத்த ஓட்டம் அதிகரித்து செல்கள் இறப்பு அடைவதை தடுக்கிறது. இதனால் வயதாகுவதால் ஏற்படும் மூட்டு வலி, தோல் தொய்வு வயதாகுவதால் ஏற்படும் பிரச்சினைகளை தடுக்கிறது.

 

 

 

இவ்வாறு தினமும் எமது பழக்கவழக்கங்களில் சிறிய சிறிய மாற்றங்களை ஏற்படுத்தினாலே வயதாவதை தடுப்பதோடு உடல் ஆரோக்கியத்தையும் பெறலாம்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
35 1
அழகுக் குறிப்புகள்பொழுதுபோக்குமருத்துவம்

துளசி இலையில் இத்தனை மருத்துவ குணங்களா?

துளசி இலையில் இத்தனை மருத்துவ குணங்களா? மூலிகையின் அரசி என்று அறியப்படும் துளசி செடியில் பல்வேறு...

20 12
அழகுக் குறிப்புகள்ஜோதிடம்பொழுதுபோக்கு

வீட்டில் எந்த திசையில் துளசிச் செடியை வைக்க வேண்டும் தெரியுமா….

அநேகமான மக்கள் வீடுகளில் துளசிச் செடியை வளர்ப்பார்கள். சிலர் வாஸ்துக்காகவும் இன்னும் சிலர் வீட்டில் நேர்மறையான...

15 21
அழகுக் குறிப்புகள்பொழுதுபோக்கு

முடி வளர்ச்சி மும்மடங்கு அதிகரிக்க வேண்டுமா..! இந்த ஒரு எண்ணெய் போதும்

அடர்ந்த நீளமான கூந்தலை தான் அனைத்து பெண்களும் விரும்புபவர்கள். முடி உதிர்வு என்பது ஆண், பெண்...

download 14 1 5
அழகுக் குறிப்புகள்பொழுதுபோக்கு

சருமத்தில் உள்ள தழும்புகளை நீக்கும் கோகோ பட்டர் !

சருமத்தில் உள்ள தழும்புகளை நீக்கும் கோகோ பட்டர் ! சருமப் பராமரிப்புக்கான கிரீம்கள் மற்றும் அழகுசாதனப்...