கோடை விடுமுறைக்கு தளபதியின் ‘பீஸ்ட்’ திரைக்கு வர இருக்கிறது.
தளபதி விஜய் நடிப்பில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது ‘பீஸ்ட்’ படப்பிடிப்பு.
படத்தின் படப்பிடிப்புகள் கட்டங்கட்டமாக நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்புக்கள் டிசம்பரில் நிறைவடையுள்ளன.
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், விஜய் – பூஜா ஹெக்டே நடிப்பில் பிரமாண்டமாக உருவாக்கி வருகிறது பீஸ்ட் . படத்தில் செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்ட பலர் இணைந்துள்ளனர். அனிருத் இசையமைகிறார்.
படத்தின் படப்பிடிப்பு, சென்னையில் நடைபெற்று முடிந்துள்ளது.
படப்பிடிப்பு 75 வீதமளவில் நிறைவடைந்துள்ள நிலையில், மிகுதி படப்பிடிப்பு இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் படப்பிடிப்பு நிறைவுபெறும் என தெரிவிக்கப்படுகிறது.
படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், 2022 ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் படம் திரைக்கு வரும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
#Vijay
Leave a comment