தளபதி விஜய் நடிப்பில் நேற்று முன்தினம் திரைக்கு வந்தது ‘பீஸ்ட்’ .
சன் பிக்ஸரஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில், விஜய் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியான இந்த திரைப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
ஏற்கனவே பாடல்கள், ப்ரோமோ என வெளியாகி இணையத்தளங்களை ஆட்டிப்படைத்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது ‘பீஸ்ட்’.
இந்த நிலையில், புத்தாண்டை முன்னிட்டு நேற்று முன்தினம் வெளியாகி இருந்த இந்த திரைப்படம் வழமையான விஜய் திரைப்படங்களை போல நெகட்டிவ் விமர்சனங்களை பெறாத தவறவில்லை.
நேர், எதிர் என போட்டி போட்டு விமர்சனங்கள் வெளியாகி வந்தாலும் படத்தின் வசூல் எகிறிவருகிறது.
முதல் நாளில் மட்டும், தமிழகத்தில் மட்டும் 35 முதல் 40 கோடி ரூபா வசூலை பெற்றுள்ள இந்த திரைப்படம், உலக அளவில் 80 கோடி ரூபா வசூலை பெற்றுள்ளது.
இந்த நிலையில், இரண்டு நாட்களில் மட்டும் 130 கோடி ரூபாவை தாண்டி வசூல் பெற்றுள்ளது ‘பீஸ்ட்’.
இதேவேளை, இரண்டு நாள் நிலவரங்கள் அடிப்படையில், உலகளவில் 100 கோடி வசூல் செய்த திரைப்படங்களின் வரிசையில் ‘பீஸ்ட்’. இரண்டாம் இடத்தில் உள்ளது. இன்று வரை முதலிடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜனியின் ’2.0’ முதலிடத்தில் உள்ளது.
#Cinema
Leave a comment