நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் பிரமாண்டமாக உருவாக்கி வருகிறது ‘பீஸ்ட்’ திரைப்படம்.
படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த மாதமளவில் போஸ்ட் புரொடக்சன் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. எதிர்வரும் ஏப்ரலில் படம் திரைக்கு வரவுள்ளது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி 100 நாட்கள் கடந்துள்ளன. இதனை கொண்டாடும் நிலையில் படத்தின் இயக்குநர் நெல்சன் தனது ருவிட்டர் பக்கத்தில் அட்டகாசமான புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
புகைப்படத்துடன், படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி 100 நாட்கள் கடந்துவிட்டன எனவும், அந்த 100 நாட்களும் தமக்கு மகிழ்ச்சியான நாட்கள் எனவும், அந்த நாட்களில் மிக அற்புதமானவர்களுடன் கழிந்தன எனவும் தெரிவித்துள்ளார்.
அவர் பதிவுசெய்த புகைப்படத்தில், அட்டகாசமான கெட்டப்பில் தளபதி விஜய் அமர்ந்திருக்க அவரை சுற்றி பூஜா ஹெக்டே, நெல்சன், ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் உள்ளிட்டவர்கள் உள்ளார்கள்.
இந்த திரைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் – பூஜா ஹெக்டே இணைந்து நடித்து வருகின்றனர். மேலும், படத்தில், செல்வராகவன், யோகிபாபு, ஷைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் உள்பட பலர் நடித்து வருகின்றனர். படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Cinema
Leave a comment