Beast – பைனல் ஆ அந்த தினம் இன்னும் ஒரு நாள்ல வரப்போது மக்களே!
யெஸ்! எல்லாரோட எதிர்பார்ப்பையும் எகிற வைத்திருக்கும் தளபதியோட பீஸ்ட் திரைப்படம் இன்னும் ஒரே நாள்ல திரைக்கு வர இருக்கும் சூழ்நிலையில அந்த படம் மற்றும் நம்ம தளபதி தொடர்பான பல விசயங்கள பத்திதான் நாம இந்த தொகுப்பில பாக்கப்போறோம்.
பீஸ்ட் திரைப்படத்துக்கான விதம் விதமான ப்ரோமோஷன் நடவடிக்கைகள் எல்லாமே போய்ட்டிருக்கு. அதாவது சன் பிக்சர்ஸ் ப்ரொடக்சன் மூலமா இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கி அனிருத் இசையமைக்குற இந்த படத்துக்கான ட்ரைலர் அண்மையில் வெளிவந்து பலத்த வரவேற்பை பெற்றிருக்கு.
அதே நேரம் பல ப்ரோமோ வீடியோக்களும் தொடர்ச்சியா ரிலீஸ் ஆகிட்டிருக்கு.
இந்த வரிசையில யாருமே எதிர்பார்க்காத ஒரு ஏற்பாட்டை செய்து அனைவரையும் அசத்தியிருக்காங்க படக்குழு. ஆமாம் மக்களே இந்த வருஷம் வழக்கமா விஜய் படத்துக்கு நடாத்தப்படுற ஓடியோ லோன்ச் நடத்த முடியாம போயிருக்கு என்றும் அதற்க்கு காரணங்கள் சொல்லப்பட்டு அந்தக் காரணங்கள் சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது என்பதும் உங்கள் எல்லாருக்குமே தெரியும் .
ஆனாலும் ஒரு தளபதி படத்துக்கு என்ன எதிர்பார்ப்பு இருக்குமோ அதே அளவான எதிர்பார்ப்பு அந்த படம் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னால் தளபதி ரசிகர்களை சந்திக்கும் ஒரு முக்கியமான தருணத்துக்கும் இருக்கும். இன்னும் சொல்லப்போனா இப்படியான ஒரு தருணத்துக்காக ரசிகர்கள் வருஷம் முழுக்கவே காத்திருப்பார்கள் என்பதுதான் உண்மை.
இப்படியான சந்தர்ப்பத்தில, இசை வெளியீட்டு விழா நடத்தப்பட முடியாமல் போன ஒரு ஏமாற்றத்தை வேறு ஒரு வழி மூலமா ஈடுகட்டியிருக்காங்க படக்குழு. அது என்ன என்றால், ஏறக்குறைய 10 வருசத்துக்கு பிறகு தளபதி விஜையுடைய நேர்காணல் ஒன்றை ஏற்படு செய்து ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்காங்க.
வழக்கமாவே தளபதியோட பொதுத்தளப் பேச்சுக்கள் மக்களுக்கு உற்ச்சாகம் வழங்கக்கூடிய ஒரு விஷயமா இருக்கும். அதுக்கு சற்றுமே குறைவில்லாம இந்த நேர்காணலும் அமைஞ்சிருக்குற அதேநேரம், காமடிக்கும், கலாய்க்கும் அண்மைக்காலமா பெயர்போன படத்தோட இயக்குனர் நெல்சன் இந்த நேர்காணலை செய்திருக்கிறார்கள் என்பது இந்த நேர்காணலை மேலும் சுவாரஸ்யப்படுத்தியிருக்கு.
சன் குழுமத்தோட தலைவர் தயாரிப்பாளர் கலாநிதிமாறனை, தளபதி விஜய் மற்றும் இயக்குனர் நெல்சன் ஆகியோர் அவரது அலுவலகத்தில் வைத்து சந்திப்பதுடன் இந்த நேர்காணல் ஆரம்பிச்சு மூவருக்கும் இடையிலான அளவலாவல் இசை பின்னணியுடன் கோர்த்து வழங்கப்படுவதை தொடர்ந்து நெல்சன் மற்றும் தளபதி ஆகியோர் நேர்காணல் களத்துக்கு செல்கின்றனர்.
வழக்கமான நேர்காணல் நடைமுறைகளில் இருந்து சற்றே விலகி கொஞ்சமாக தூவப்பட்ட எள்ளல் பாணியில் ஆரம்பிக்கும் இந்த நேர்காணலில் பல்வேறு வகையான விடயங்கள் குறித்த கேள்விகள் மற்றும் மனம் திறந்த பதில்கள் என்பவற்றை ரசிகர்களுக்கு கொண்டுசேர்த்திருக்கிறது.
குறிப்பா, விஜயினுடைய நடிப்பு கதை தேர்வுகள், அவருடைய கடவுள்நம்பிக்கை, உணவு முறை மற்றும் சுற்றுலா திட்டங்கள் என விஜயினுடைய தனிப்பட்ட வட்டத்திற்கு வெளியில் இருக்கும் அனைவருமே அறிந்துகொள்ள ஆசைப்படும் விடயங்களை நேர்காணலின் ஆரம்பத்தில் தொட்டுப் போகும் இயக்குனர் நெல்சன், அதற்கான பதில்களை விஜயின் முகம் கோணாத வகையில் பெற்றுக்கொண்டிருப்பது கலகலப்பாக அமைந்திருக்கிறது.
நேர்காணல்கள் மற்றும் பொது மேடைகளில் அரசியல் குறித்த யாரேனும் நபர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு வெகுவாகவே இயல்புடையவர் விஜய். தானாக முன்வந்து சில அரசியல் கருத்துக்களை இசை வெளியீட்டு விழாக்கள் உள்ளிட்ட நிகழ்வுகளில் முன்வைக்கும் விஜய் அது குறித்த கேள்விகளை வெளிப்படையாகவே மறுத்துவிடுவது இயல்பு.
ஆனால் விஜய் தளபதி யில் இருந்து தலைவன் எனும் அந்தஸ்துக்கு செல்கின்றமை. கடந்த தமிழக உள்ளுராட்சி மற்றும் நகராட்சி தேர்தல்களில் விஜயின் பெயர் மற்றும் புகைப்படங்கள் ஆதரவாளர்களினால் பயன்படுத்தப்பட்டமை போன்ற விடயங்களுக்கு லாவகமாகவே பதிலை பெற்றுக்கொண்டிருந்தார் நெல்சன். அதுமட்டுமல்லாமல் விஜய் மனமுவந்து அதற்கான பத்திகளை வழங்க முன்வந்திருந்தமை சிறப்பு.
இவற்றோடு சேர்த்து, விஜயின் மகனின் திரை வருகை, தளபதி 66 க்கான புதிய அப்டேட் என பல முடிச்சுக்களை அவிழ்க்க காலம் கொடுத்திருக்கும் இந்த நேர்காணலில் தான் படக்குழுவின் குறிப்பிட்ட சில நபர்களோடு சேர்த்து காரில் உலா வந்த காணொளியினை ரசிகர்களுக்கு ரிலீஸ் பண்ணுங்கள் அவர்கள் மிகவும் சந்தோஷப்படுவார்கள் என விஜய் கூறியமை மிகவும் நெகிழ்ச்சியான தருணம் என்றே கூற வேண்டும்.
இவ்வாறு 10 வருடங்களுக்கு பிறகு தளபதியின் நேர்காணலை பார்க்கும் வாய்ப்பை பெற்ற ரசிகர்கள் அது குறித்து பேச்சுக்கள் ஓயும் முன்னரே பீஸ்ட் திரைப்படத்தை திரையில் காணும் வாய்ப்பைப் பெற்றுக்கொள்ளப் போகிறார்கள். அப்படிப் பார்த்தால் தொடர்ச்சியாக தளபதி ரசிகர்களுக்கு கொண்டாட்டம் மிகுந்த நாட்களே. பீஸ்ட் வெற்றிபெற நாமும் வாழ்த்துகிறோம்.
#Beast #thalapathy
Leave a comment