nadikai 2
பொழுதுபோக்குசினிமா

பிரபல நடிகை கடத்தல்!

Share

நடிகை சஞ்சனா கல்ராணி மீது டாக்ஸி ரைவர்  புகார் அளித்துள்ளார்.

நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி, கன்னட திரையுலகில் பிரபல நடிகையாகயுள்ளார்.

சென்ற  வருடம் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் வெளியே வந்திருந்தார்.

அண்மையில் நடிகை சஞ்சனா, பெங்களூரில் டாக்ஸியில் படப்பிடிப்பிற்கு கலந்துகொள்ள சென்றுள்ளார்.
அப்போது காரில் ஏ.சி போடும் விவகாரம் தொடர்பாக சாரதிக்குும், சஞ்சனாவிற்கும் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. சாரதியை சஞ்சனா தகாத வாத்தையில் திட்டியுள்ளார்.

இதனையடுத்து நடிகை சஞ்சனாவின் மீது சாரதி மணி , ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள பொலிஸ் நிலையத்தில் புகாரளித்துள்ளார். திட்டும்போது எடுக்கப்பட்ட வீடியோ ஆதாரங்களையும் பொலிஸிடம்  ஒப்படைத்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் நடிகை சஞ்சனா, ராஜராஜேஸ்வரி நகருக்கு வாடகைக் காரில் சென்றேன். எனக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு இல்லை. என்னிடம் பணம் இல்லாததால் டாக்ஸியில் சென்றேன்.
ராஜராஜேஸ்வரி நகருக்கு செல்வதற்கு பதில் கெங்கேரி நோக்கி கார் சென்றது.

என்னை கடத்தி செல்வதாக நினைத்து சாரதியுடன்  வாக்குவாதத்தில் ஈடுபட்டேன். ஆனால் அவரை தகாத வார்த்தையில் திட்டவில்லை. நான் தவறேதும் செய்யவில்லை.

மேக்கப் போடாததால் என்னை யாரும் அடையாளம் கண்டுகொள்ள முடியாது. அதனால் ஓட்டுநருக்கு நான் நடிகை என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தவறான பாதையில் சென்றதால் நான் கண்டித்தேன்.

அதனால் அவர் பொலிஸ் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார். நான் நடிகை என்ற காரணத்தால் இந்த விவகாரம் பெரிய பிரச்னையாக பார்க்கப்படுகிறது என கூறியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக பொலிஸார்  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

 

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15384441 newproject97
பொழுதுபோக்குசினிமா

ஜனநாயகன் படத்தைத் தொடர்ந்து தனுஷுடன் இணையும் எச்.வினோத்: இசையமைப்பாளராக சாம் சி.எஸ். உறுதி!

‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய எச்.வினோத், தனது அடுத்த...

25 694a3cc6694cc
பொழுதுபோக்குசினிமா

படைத்தலைவன்’ படத்தைத் தொடர்ந்து ‘கொம்புசீவி: கேப்டன் மகனின் அடுத்த அதிரடி!

மறைந்த நடிகர் ‘கேப்டன்’ விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம்...

44528881 6
பொழுதுபோக்குசினிமா

ரிலீஸிற்கு முன்பே சாதனை: ‘ஜனநாயகன்’ படத்தின் வெளிநாட்டு முன்பதிவு 4 கோடியைக் கடந்தது!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமுமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின்...

maxresdefault 1
பொழுதுபோக்குசினிமா

ஜனவரி 10-ல் வெளியாகிறது சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’: அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!

சிவகார்த்திகேயன் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘பராசக்தி’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியில் மாற்றம் செய்யப்பட்டு, தற்போது...