சத்யராஜுக்கு முடி கொட்டியதன் ரகசியம்!! அவரே சொன்ன காரணம்..

24 66483db0befdc

சத்யராஜுக்கு முடி கொட்டியதன் ரகசியம்!! அவரே சொன்ன காரணம்..

80 களில் மிரட்டல் வில்லன் என்றாலே அது சத்யராஜ் தான். கடந்த 40 ஆண்டுகளாக சினிமாவில் பயணித்து வரும் இவர் தற்போதும் பிசியாக நடித்து கொண்டு இருக்கிறார்.

தற்போது சத்யராஜ் மற்றும் வசந்த்ரவி இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘வெப்பன்’ வருகிற 23 -ம் தேதி வெளியாக இருக்கிறது .

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட சத்யராஜ், கே எஸ் ரவிக்குமார் குறித்து பேசினார். அதில் அவர், நான் நிறைய தப்பான முடிவுகளை எடுத்து இருக்கிறேன். கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த இரண்டு படங்களை நான் மிஸ் செய்துவிட்டேன். அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட். அந்த படம் வேண்டாம் என்று நான் ஒரு படம் நடித்தேன்.

நான் நடித்த படமும், கே எஸ் ரவிக்குமார் படமும் ஒரே தினத்தில் வெளியானது. என்னுடைய படம் வெறும் 2 வாரம் ஓடியது,  அவருடைய படம் 25 வாரம் ஓடியது.. நிம்மதியா தூங்க முடியுமா?.. அதுவரை என்னுடைய முடி நல்ல இருந்தது, அதுக்கு அப்புறம் தான் கொட்டியது என்று சத்யராஜ் தமாஷாக பேசியுள்ளார்.

Exit mobile version