images 6 1
சினிமாபொழுதுபோக்கு

நடிகர் மனோபாலா காலமானார்! சோகத்தில் திரையுலகம்!

Share

நடிகர் மனோபாலா காலமானார்! சோகத்தில் திரையுலகம்!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரும், தயாரிப்பாளரும், நடிகருமான மனோபாலா உடல்நலக்குறைவால் காலமானார்.

69 வயதாகும் இவர் கல்லீரல் பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சிகிச்சைக்கு மத்தியில் வீட்டில் ஓய்வெடுத்து வந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.

மனோபாலா இவர் அரண்மனை, டான், துப்பாக்கி, சீமராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் பிதாமகன் படத்தில் நடித்திருந்த கதாப்பாத்திரம் அனைவராலும் பேசப்பட்டது.

இயக்குனர் பாரதிராஜாவின் புதிய வார்ப்புகள் படத்தில் உதவி இயக்குனராக மனோபாலா பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மனோபாலா ஆகாய கங்கை படத்தின் மூலம் திரையுலகில் இயக்குனராக மனோபாலா அறிமுகமானார்.

ரஜினி நடித்த ஊர்க்காவலன் படத்தை இயக்கிய மனோபாலா பிள்ளை நிலா, சிறைபறவை, மூடு மந்திரம், கருப்பு வெள்ளை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

சதுரங்க வேட்டை உள்ளிட்ட 3 திரைப்படங்களை தயாரித்துள்ளார். இவரது திடீர் மறைவு திரையுலகினரை மட்டுமல்லாது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

#cinema

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
37 1
சினிமா

இலங்கை தெருவில் நடந்து சென்ற சந்தோஷ் நாராயணன்.. ஒரு நபர் வந்து சொன்னதை கேட்டு ஷாக்

தமிழ் சினிமாவில் தற்போது முக்கிய இசையமைப்பாளர்களில் ஒருவர் சந்தோஷ் நாராயணன். சமீபத்தில் சூர்யாவின் ரெட்ரோ படத்திற்கு...

36 1
சினிமா

ரவி மோகனின் மிகப்பெரிய ரசிகை நான் ஆனால்.. பாடகி கெனிஷா சொன்ன ரகசியம்

நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து தனக்கு விவாகரத்து வேண்டும் என்று கோரிய...

35 3
சினிமா

ஷாருக்கான் அணிந்திருக்கும் இந்த வாட்ச் விலை எவ்வளவு தெரியுமா!

பாலிவுட் பாட்ஷா என ரசிகர்களால் அழைக்கப்பட்டு கொண்டாடப்படுவர் நடிகர் ஷாருக்கான். இவர் நடிப்பில் கடைசியாக பதான்,...

34 3
சினிமா

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த செல்வராகவனின் 7ஜி ரெயின்போ காலனி 2.. ரிலீஸ் அப்டேட்

காவிய அந்தஸ்தைப் பெற்ற காதல் படங்களில் ஒன்றாக 7ஜி ரெயின்போ காலணி படம் இப்போதும் ரசிகர்களால்...