சினிமா
நடிகை சாய் பல்லவியின் உடல்நிலை என்ன ஆனது- இப்போது எப்படி உள்ளார், இயக்குனர் பதில்

சந்து மொண்டேட்டி இயக்கத்தில் நாக சைத்தன்யா, சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள படம் தண்டல்.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளனர். வரும் பிப்ரவரி 7ம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாகவுள்ள நிலையில் படத்தில் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
இதில் படக்குழுவினரை தாண்டி சிறப்பு விருந்தினராக நடிகர் கார்த்தி கலந்துகொண்டார்.
இந்த படத்தின் ஸ்பெஷல் நிகழ்ச்சி மும்பையிலும் நடக்க சாய் பல்லவி மட்டும் கலந்துகொள்ளவில்லை.
இதுகுறித்து இயக்குனர் சந்து மொண்டேட்டி கூறுகையில், நடிகை சாய் பல்லவிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர் அதை பொருட்படுத்தாமல் பட நிகழ்ச்சிகளில் பங்குபெற்று வந்தார்.
இதனால் சோர்வடைந்த அவரை ஓய்வு எடுக்க கூறியதால் சாய் பல்லவி வரவில்லை என கூறியுள்ளார்.