Connect with us

சினிமா

மீனாவை திருமணம் செய்து கொள்ள தயார்.. அவர் குழந்தையை நான் வளர்க்கிறேன்: பிரபலம் அறிவிப்பு..!

Published

on

meena 6606aacb0a309

மீனாவை திருமணம் செய்து கொள்ள தயார்.. அவர் குழந்தையை நான் வளர்க்கிறேன்: பிரபலம் அறிவிப்பு..!

நடிகை மீனாவை திருமணம் செய்து கொள்ள தயார் என்றும் அவருடைய மகளை எனது மகள் போல் நான் வளர்க்கவும் தயாராக இருக்கிறேன் என்றும் பிரபலம் ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை மீனா தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த நிலையில் அவர் கடந்த 2009 ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் இருக்கும் நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு திடீரென வித்யாசாகர் காலமானார்.

அவருடைய மறைவு மீனாவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பதும் அவர் மனதளவில் உடைந்து சில நாட்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மீனாவின் நெருங்கிய தோழிகளான கலா மாஸ்டர் உட்பட ஒரு சிலர் மீனாவின் மனதை தேற்றி கொஞ்சம் கொஞ்சமாக அவரை மனதளவில் மீட்டனர். தற்போது தான் மீனா ஓரளவு இயல்பு நிலைக்கு திரும்பி திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அவ்வப்போது மீனாவின் இரண்டாவது திருமணம் குறித்த செய்திகள் வெளி வந்து கொண்டிருக்கும் நிலையில் அவர் அந்த தகவல்களை முழுவதுமாக மறுத்தார். இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் தனக்கு இல்லை என்றும் தனது மகளின் வாழ்வு தான் தனக்கு முக்கியம் என்றும் அவர் பலமுறை கூறி இரண்டாவது திருமணம் குறித்து மறுப்பு தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் கேரளாவை சேர்ந்த யூடியூபர் அப்துல் வர்கீஸ் என்பவர் மீனாவை திருமணம் செய்து கொள்ள தயார் என்றும் மீனாவுக்கு ஒரு மகள் இருப்பது எனக்கு தெரியும் இருந்தாலும் அதை பற்றி எனக்கு கவலை இல்லை ,அந்த குழந்தையை நான் என் குழந்தை போல் வளர்க்கிறேன், மீனா ஒப்புக்கொண்டால் நான் அவரை திருமணம் செய்து கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

அப்துல் வர்கீஸ் என்பவர் ஒரு சர்ச்சைக்குரிய நபர் என்பதும் ஏற்கனவே நடிகைகள் நித்யா மேனன், அக்சராஹாசன் ஆகியோர்களை திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியிருந்தார் என்பதும் அதன் பின்னர் அவருக்கு கடுமையான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டதை அடுத்து மன்னிப்பு கேட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

ஜோதிடம்

tamilnaadi 5 tamilnaadi 5
ஜோதிடம்2 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 19 ஜனவரி 2025 – Daily Horoscope

நாளின் தொடக்கத்தில் நாம் அன்றைய நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கையாக சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள, நினைத்த செயல்கள் வெற்றி பெறும். கிரக...

tamilnaadi 5 tamilnaadi 5
ஜோதிடம்2 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 18 ஜனவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 18 ஜனவரி 2025 – Daily Horoscope நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை போல்...

tamilnaadi 5 tamilnaadi 5
ஜோதிடம்3 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 17 ஜனவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 17 ஜனவரி 2025 – Daily Horoscope ஒவ்வொரு நாளின் தொடக்கத்தில் நாம் அந்த நாளுக்குரிய ராசி பலனை அறிந்து கொண்டு...

tamilnaadi 5 tamilnaadi 5
ஜோதிடம்4 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 16 ஜனவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 16 ஜனவரி 2025 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 16.01.2025, குரோதி வருடம் தை மாதம் 3, வியாழக் கிழமை,...

tamilnaadi 4 tamilnaadi 4
ஜோதிடம்5 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 15 ஜனவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 15 ஜனவரி 2025 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 15.01.2025, குரோதி வருடம் மார்கழி 2, புதன் கிழமை, சந்திரன்...

tamilnaadi 4 tamilnaadi 4
ஜோதிடம்1 வாரம் ago

இன்றைய ராசி பலன் : 13 ஜனவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 13 ஜனவரி 2025 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 13.01.2025 குரோதி வருடம் மார்கழி 29, திங்கட் கிழமை, சந்திரன்...

tamilnaadi 4 tamilnaadi 4
ஜோதிடம்1 வாரம் ago

இன்றைய ராசி பலன் : 12 ஜனவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 12.01.2025, குரோதி வருடம் மார்கழி 28 ஞாயிற்று கிழமை, சந்திரன் மிதுனம் ராசியில் சஞ்சரிக்கிறார். விருச்சிகம் ராசியில் உள்ள சேர்ந்த விசாகம், அனுஷம் நட்சத்திரத்திற்கு...