dhanush kamal 6606dd4febf20
சினிமாபொழுதுபோக்கு

கமல்ஹாசனை நைசாக கழட்டிவிட்ட தனுஷ்.. இனிமேல் தான் ஆட்டம் ஆரம்பம்..!

Share

கமல்ஹாசனை நைசாக கழட்டிவிட்ட தனுஷ்.. இனிமேல் தான் ஆட்டம் ஆரம்பம்..!

தனுஷ் படத்தில் கமல்ஹாசன் பணி புரிய இருந்ததாக கூறப்பட்ட நிலையில் கமல்ஹாசனை தனுஷ் நைசாக கழட்டி விட்டதாக செய்திகள் கசிந்துள்ளது.

இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ’இளையராஜா’ என்ற படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்க இருப்பதாகவும் கமல்ஹாசன் திரைக்கதை எழுத இருப்பதாகவும் கூறப்பட்டது.

ஆனால் கமல்ஹாசன் திரைக்கதை எழுதினால் அது ஏ சென்டர் மக்களுக்கு மட்டும் தான் புரியும் என்றும், பி,சி சென்டர்களுக்கு புரியும் வகையில் அவர் எழுத மாட்டார் என்றும் இளையராஜாவிடம் கூறிய தனுஷ், நானே திரைக்கதை எழுதுகிறேன் என்று கூறி அவரிடம் ஒப்புதல் பெற்று விட்டாராம்.

ஏற்கனவே கமல்ஹாசன் மூன்று படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அரசியலிலும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதால் இளையராஜா இதற்கு ஒப்புக் கொண்டிருப்பதாகவும் இதனை அடுத்து தனுஷ் இந்த படத்திற்கு திரைக்கதை எழுத தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.

அது மட்டும் இன்றி அருண் மாதேஸ்வரன் என்பது பெயரளவுக்கு தான் இயக்குனர் என்றும் தனுஷ் தான் முழு படத்தையும் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மொத்தத்தில் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் மொத்த பணியையும் தன் பக்கம் தனுஷ் இழுத்துக் கொண்டதை அடுத்து இந்த படத்தின் மூலம் ஒரு மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என்று முடிவு செய்துள்ளாராம்.

Share
தொடர்புடையது
pradee1 1768564794
பொழுதுபோக்குசினிமா

பிரதீப் ரங்கநாதனின் அடுத்த மெகா மூவி: ஸ்ரீலீலா மற்றும் மீனாட்சி சௌத்ரி என இரண்டு கதாநாயகிகளுடன் கூட்டணி?

தமிழ் சினிமாவின் இளம் தலைமுறையினரின் ‘ஃபேவரிட்’ நாயகனாக உருவெடுத்துள்ள பிரதீப் ரங்கநாதன், தான் இயக்கி நடிக்கவுள்ள...

3721l134 dhanush 625x300 16 January 26
பொழுதுபோக்குசினிமா

தனுஷ் – மிருணாள் தாகூர் காதலர் தினத் திருமணமா? பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நெருக்கமான வட்டாரங்கள்!

நடிகர் தனுஷ் மற்றும் நடிகை மிருணாள் தாகூர் ஆகியோர் வரும் பிப்ரவரி 14-ஆம் திகதி காதலர்...

articles2FAZY2xf9NgDMvMOmHuDk2
பொழுதுபோக்குசினிமா

விஜய் சேதுபதி – பூரி ஜெகநாத் மெகா கூட்டணி: ‘ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு’ டைட்டில் அறிவிப்பு!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் பிரபல தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகநாத் (Puri Jagannadh)...

768 512 25826385 thumbnail 16x9 ilayaraja
பொழுதுபோக்குசினிமா

இளையராஜாவின் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த அனுமதி கோரி சன் டிவி மனு: நீதிமன்றத்தில் புதிய சட்டப்போராட்டம்!

தனது பாடல்கள், பெயர் மற்றும் புகைப்படத்தை வணிக ரீதியாகப் பயன்படுத்துவதற்கு இசைஞானி இளையராஜா பெற்றுள்ள தடை...