tamilni 27 scaled
சினிமாபொழுதுபோக்கு

தளபதி விஜய்யின் கடைசி பட டைட்டில் இதுவா? ரிஜிஸ்டர் செய்த நிறுவனம்..!

Share

தளபதி விஜய்யின் கடைசி பட டைட்டில் இதுவா? ரிஜிஸ்டர் செய்த நிறுவனம்..!

தளபதி விஜய் தனது அரசியல் வருகையை அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில் ’தமிழக வெற்றி கழகம்’ என்ற அரசியல் கட்சியின் பெயரையும் வெளியிட்டார் என்பதை பார்த்தோம். மேலும் நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் இன்னும் ஒரே ஒரு படம் மட்டும் தான் நடிக்க இருப்பதாகவும், அதன் பின்னர் முழு நேர அரசியலில் ஈடுபட இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

தற்போது அவர் ’கோட்’ என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் அவரது அடுத்த படம் தான் கடைசி படம் என்பதும் இந்த அறிக்கையில் இருந்து தெரிய வருகிறது. இந்த நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை ராஜமவுலி இயக்கிய ’ஆர்ஆர்ஆர்’ என்ற படத்தை தயாரித்த டிவிவி என்ற பிரபல தெலுங்கு திரைப்பட நிறுவனம் தான் தயாரிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

கிட்டத்தட்ட இந்த செய்தி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்நிறுவனம் தற்போது ஹங்ரி சேட்டா (Hungry Cheetah) என்ற டைட்டிலை பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தை தயாரிக்க இருக்கும் இந்நிறுவனம் விஜய்யின் படத்திற்காக தான் இந்த டைட்டிலை பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தனது அடுத்த படத்தை இயக்குவது யார் என்ற முடிவை இன்னும் சில நாட்களில் விஜய் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக கார்த்திக் சுப்புராஜ் தான் விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவார் என்றும் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் தெரிகிறது.

Share
தொடர்புடையது
Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...