ரஜினியை கூப்பிட்டு வைச்சு அசிங்கப்படுத்திய இளையராஜா
80, 90களில் வந்த படங்களில் என்னதான் நடிகர்கள், ஹீரோவாக இருந்தாலும் அவர்களுடைய படத்துக்கு பின்னணியில் இருந்து உயிரூட்டியது இளையராஜா தான். இவருடைய இசை இல்லை என்றால் எந்த படமும் அசைந்திருக்காது என்றே சொல்ல வேண்டும். இப்பொழுது வரை இவருடைய பாடல்களை கேட்டு ரசிக்காதவர்கள் யாரும் கிடையாது.
அப்படிப்பட்ட இவரின் இசையை எந்த அளவுக்கு தூக்கி வைத்து கொண்டாடுகிறோமோ, அதே அளவுக்கு இவருடைய கேரக்டர் வெறுக்கும் அளவிற்கு இருக்கிறது. அதாவது இவரை பொறுத்தவரை மற்றவர்கள் யார் என்று கூட பார்க்க மாட்டார். யாராக இருந்தாலும் அவர்களை கடுகடுவென பேசக்கூடியவர். யாரையும் கடுகளவு கூட மதிக்க மாட்டார். இதுதான் இவருடைய உண்மையான சுபாவம்.
இவருடைய இந்த செயலால் சினிமா பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அந்த வரிசையில் ரஜினியும் இவரால் வேதனைப்படும் அளவிற்கு ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. ரஜினியை பொறுத்தவரை இளையராஜா அவருக்கு சாமி மாதிரி. அதனால் அவரை பார்க்கும் பொழுது சாமி என்று தான் அழைப்பார்.
இளையராஜா ஒரு முறை ரஜினியை திருவண்ணாமலை கோவிலுக்கு செல்லலாம் என்று அழைத்துச் சென்றிருக்கிறார். அப்பொழுது அங்கிருந்த மக்கள் ரஜினியை பார்த்ததும் எல்லோரும் ஓடிப்போய் அவரிடம் கூட்டம் கூட்டமாக பேச ஆரம்பித்து விட்டார்கள். அந்த நேரத்தில் பெரிய தள்ளுமுள்ளு ஏற்பட்டிருக்கிறது.
இதனை பார்த்து பொறுத்துக் கொள்ள முடியாத இளையராஜா கடுப்பாகிவிட்டார். நான் எவ்வளவு பெரிய இசைஞானி நம்மளை யாரும் கண்டு கொள்ளவில்லை, ஆனால் ரஜினியை சுற்றி இப்படி கூட்டம் போடுகிறார்களே என்ற பொறாமையில் கடுப்பாகிவிட்டார். அதனால் இளையராஜா ரஜினியிடம் தயவு செய்து இந்த இடத்தில் நிற்காத, உடனே கிளம்பி போயிடு என்று வெளியே போக சொல்லிட்டார்.
இவர் சொன்னதை கேட்டு ரஜினி ஒரு வார்த்தை கூட பேசாமல், சாமியையும் கும்பிடாமல் தலை குனிந்தபடியே காரில் ஏறிக்கொண்டு சென்னைக்கு வந்துவிட்டார். ரஜினி வந்தால் இப்படி நடக்கும் என்று தெரிந்தே இளையராஜா அவரைக் கோவிலுக்கு அழைத்துச் சென்று வேணும் என்றே அவமானப்படுத்தி இருக்கிறார். இதை தெரிந்தும் ரஜினி, இளையராஜாவை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசாமல் போனதற்கு காரணம் அவருடைய சாமி மாதிரி வைத்துப் பார்ப்பது தான்.
1 Comment