சினிமா
14 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் வெற்றி ஜோடி
Vantom.. Neenga keta update idho 😉
— Seven Screen Studio (@7screenstudio) February 1, 2023
After 14 years, Get ready to meet the sensational on-screen pair once again ❤️#Thalapathy @actorvijay sir - @trishtrashers mam#Thalapathy67Cast #Thalapathy67 @Dir_Lokesh @Jagadishbliss pic.twitter.com/7kvd7570ti
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் தளபதி 67. இப் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தளபதி 67 படத்தில் நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ,நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதனிடையே இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷாவை நடிக்க வைக்க படக்குழுவினர் ஆலோசிப்பதாக தகவல் பரவி வந்தது. இந்நிலையில் இதனை உறுதிப்படுத்தும் வகையில் தளபதி 67 படத்தில் திரிஷா இணைந்துள்ளதாக வீடியோ வெளியிட்டு படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்குமுன்பு திரிஷா, விஜய் ஜோடியாக கில்லி, குருவி, ஆதி, திருப்பாச்சி உள்ளிட்ட படத்தில் நடித்திருந்தார். 14 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இருவரும் இணைந்து நடிப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இதேவேளை நேற்று இடம்பெற்ற தளபதி 67 பட பூஜையில் விஜய், திரிஷா, ஆக்சன் கிங் அர்ஜுன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#cinema
You must be logged in to post a comment Login
ஒரு பின்னூட்டத்தை இட நீங்கள் கட்டாயம் உள்நுழைந்திருக்க வேண்டும்.
Pingback: 'செல்லம்'னு சொன்னது நான்தான்.. என் பிட்டு தான் கில்லியில் பிரகாஷ்ராஜ் பேசினார் - tamilnaadi.com