சிறுபான்மை என்று கூறினால் செருப்பால் அடிப்பேன்! கொந்தளித்த சீமான்
உலகம்செய்திகள்

 ‘செல்லம்’னு சொன்னது நான்தான்.. என் பிட்டு தான் கில்லியில் பிரகாஷ்ராஜ் பேசினார்

Share

 ‘செல்லம்’னு சொன்னது நான்தான்.. என் பிட்டு தான் கில்லியில் பிரகாஷ்ராஜ் பேசினார்

கில்லி படத்தில் பிரகாஷ் ராஜ் பேசிய ‘செல்லம்’ என்ற வசனத்தை முதன் முதலில் தாம் பயன்படுத்தியதாகவும், அது பரவி தான் கில்லியில் வந்துள்ளது என்றும் நாம் தமிழர் கட்சி சீமான் கூறியுள்ளார்.

தமிழக மாவட்டம் கோவையில் நேற்று நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய சீமான்,”நான் இரவில் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தேன். அதில் ‘சொல்லு செல்லக்குட்டி’ என பேசினேன். என் மாமியார் வெளியில் தரையில் படுத்திருந்தார். அதை அவர் கேட்டுக்கொண்டே இருந்தார்.

பின், என் மாமியார் என் மனைவியிடம் இதை பற்றி கூறினார். அதற்கு என் மனைவி, அண்ணன் வடிவேலு கூட பேசியிருப்பார் எனக் கூறியுள்ளார். அதற்கு என் மாமியார், அப்படியா இருவரும் பேசுவார்கள் எனக் கேட்டுள்ளார்” என்றார்.

மேலும் பேசிய சீமான், “முதன் முதலில் ‘செல்லம்’ என்ற வார்த்தையை சினிமாவில் நான் தான் பயன்படுத்தினேன். பாஞ்சாலங்குறிச்சி படத்தில் வடிவேலுவை இயக்கும் போது, ‘செல்லம் இங்க வா போ’ என்று தான் பேசுவோம். அது, இப்போது பரவிவிட்டது.

அப்படி தான் கில்லி படத்தில் பிரகாஷ் ராஜ் பேசும்போது வைத்து விட்டார்கள். அது நான் போட்ட பிட்டு தான். ‘செல்லம்ம்’ -ன்னு பிரகாஷ் ராஜ் பேசுவாரே, அது தான்” எனக் கூறினார்.

Share
தொடர்புடையது
ATSB
உலகம்

நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள் – பயணிகளின் நிலை குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் !

இன்று காலை, சிட்னி விமான நிலையத்தில் ஜெட்ஸ்டார் பயணிகள் விமானமும் கட்டார் ஏர்வேஸ் விமானமும் மோதிக்கொள்ளும்...

tax d
உலகம்

செனட் அவையின் ஒப்புதலுடன் நிறைவேறியது 100 வீத வரி விதிப்பு!

“லிண்ட்சே ஓ கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026” என அழைக்கப்படும் இந்தச்...

iraan us war
உலகம்

மீண்டும் தீவிரமடையும் தாக்குதல்கள் – பொதுமக்கள் 11 பேர் பலி.

இன்று அதிகாலை ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள், ஏமனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மாரேப் மாகாணத்தை...

pakistan on police attack
உலகம்

பாகிஸ்தானில் நடத்தப்பட்டுள்ள கொடூர தாக்குதல் – 11 காவல்த்துறையினர் பலி.

ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஹங்கு மாவட்டத்தில் அமைந்துள்ள கஸீனா பொலிஸ் சாவடியைக்...