1800709 paneer popcorn 1
சமையல் குறிப்புகள்பொழுதுபோக்கு

பன்னீர் பாப்கார்ன்

Share

தேவையான பொருட்கள்

பன்னீர் – 200 கிராம்

மஞ்சள் தூள் – ¼ தேக்கரண்டி

இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி

காஷ்மீரி மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி

மிளகு தூள் – ½ தேக்கரண்டி

சோள மாவு – 5 தேக்கரண்டி

ரொட்டித் தூள் அல்லது நுணுக்கிய பொறை – 100 கிராம்

பொடிதாக நறுக்கிய கொத்தமல்லி தழை – சிறிதளவு

எண்ணெய் – தேவையான அளவு

தண்ணீர் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை

பன்னீரை சிறிய சதுர வடிவ துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் பன்னீர் துண்டுகள், மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது, பொடிதாக நறுக்கிய கொத்தமல்லி தழை, சிறிது மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கிளறி 20 நிமிடங்கள் மூடி வைக்கவும்.

மற்றொரு பாத்திரத்தில் மீதமிருக்கும் மிளகு தூள், சோள மாவு, உப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்துக் கட்டியில்லாமல் தோசை மாவு பதத்தில் கலக்கிக்கொள்ளவும்.

பின்னர் மசாலா கலந்திருக்கும் பன்னீர் துண்டுகளை, சோளமாவு கலவையில் தோய்த்து, ரொட்டித் தூள் அல்லது நுணுக்கிய பொறையில் புரட்டி எடுத்து, மீண்டும் சோளமாவு கலவையில் தோய்த்து, எண்ணெய்யில் போட்டு மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.

இப்போது சுவையான மொறு மொறு பன்னீர் பாப்கார்ன் தயார். இதை தக்காளி சாசுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

#LifeStyle

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 1
சினிமாபொழுதுபோக்கு

கோலிவுட்டில் புது ஜோடி!! சூர்யாவின் அடுத்த பட ஹீரோயின்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா நடிப்பில், கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ...

10 4
சினிமாபொழுதுபோக்கு

தொகுப்பாளினி பிரியங்காவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா

விஜய் தொலைக்காட்சியின் மூலம் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்து...

9 4
சினிமாபொழுதுபோக்கு

38 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரியாக இருக்கிறாரா சமந்தா

நடிகை சமந்தா தெலுங்கில் வெளிவந்த Ye Maaya Chesave திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதன்பின்...

11 3
ஏனையவைசினிமாபொழுதுபோக்கு

பத்மபூஷன் விருது வாங்கிய அஜித்.. பூரிப்பில் ஷாலினி!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் 30 வருடங்களுக்குக்கும் மேலாக நடித்து வருகிறார். மேலும் அவர் தற்போது...