500x300 1796601 sama5
சினிமாபொழுதுபோக்கு

மீண்டும் மருத்துவமனையில் சமந்தா!!!

Share

நடிகை சமந்தா கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் மருத்துவமனையில் சில நாட்கள் சிகிச்சை பெற்று அதன் பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்பதும் வீட்டிலேயே அவரது சிகிச்சையை தொடர்ந்து வருவதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் நேற்று மீண்டும் நடிகை சமந்தா ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது உடல் நிலை மோசமாக இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது. இதனால் சமந்தாவின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி சமந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்றும் அவர் வீட்டிலேயே தான் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தற்போது நலமுடன் இருப்பதாகவும் சமந்தாவின் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் சமந்தா மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வந்திருக்கும் தகவல் தவறானது என்றும் இந்த தகவலை பரப்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து சமந்தா தற்போது உடல் நலத்துடன் வீட்டில்தான் இருக்கிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

#cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...