500x300 1787850 kamal
சினிமாபொழுதுபோக்கு

மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் உலகநாயகன்

Share

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாபெரும் வெற்றி பெற்ற விக்ரம் படத்தை தொடர்ந்து கமல் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அதேபோல் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் ரூ.500 கோடி வசூலித்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இதையடுத்து அந்த படத்தை தயாரித்த லைகா நிறுவனம் சார்பில் ரஜினி நடிப்பில் உருவாகும் திரைப்படத்தை மணிரத்னம் இயக்குவார் என தகவல்கள் வெளியாகின. இதனால் ரஜினி ரசிகர்கள் அதிக ஆவலுடன் அந்த அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந்நிலையில் திடீர் திருப்பமாக தற்போது மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் கமல்ஹாசன் நடிப்பது உறுதியாகி உள்ளது. இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ், கமலின் ராஜ்கமல் நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு குறித்து வீடியோ ராஜ்கமல் தயாரிப்பு நிறுவன டுவிட்டர் பக்கத்தில் வெளியாகி உள்ளது. பிரம்மாண்டமாக தயாராகும் இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார்.

கடந்த 1987-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த வெளியான நாயகன் திரைப்படம் இந்திய அளவில் அதிக கவனம் பெற்றது. இன்றும் மிகச் சிறந்த இந்திய படங்களில் பட்டியலில் அந்த படத்திற்கும் இடம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

#Cinema

 

Share
தொடர்புடையது
5 20
சினிமாபொழுதுபோக்கு

விஜய் கேட்ட கேள்வியால் நடிப்பதையே நிறுத்திய நடிகை ரோஜா… அப்படி என்ன சொன்னார்?

தமிழ் சினிமாவில் 90களில் கலக்கிய முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ரோஜா. தமிழ், தெலுங்கு,...

4 20
சினிமாபொழுதுபோக்கு

34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா

தென்னிந்திய சினிமாவில் திறமையான நடிகைகளில் ஒருவரான அமலா பாலுக்கு இன்று பிறந்தநாள். 34வது பிறந்தநாளை கொண்டாடும்...

3 20
சினிமாபொழுதுபோக்கு

வசூல் நாயகனாக மாறிய பிரதீப்.. Dude படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல்..

அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் திரைக்கு வந்த...

2 20
சினிமாபொழுதுபோக்கு

நான் விவாகரத்து பெற்றபோது சிலர் கொண்டாடினார்கள்.. சமந்தா உடைத்த ஷாக்கிங் விஷயம்!

இந்திய அளவில் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவர் சமந்தா. இவர் தற்போது படங்கள் மட்டுமின்றி வெப் தொடர்களிலும்...