‘பீஸ்ட்’ திரைப்படத்தை தொடர்ந்து நடிப்பில் உருவாக்கவுள்ளது ‘தளபதி – 66’
இயக்குநர் வம்சி இயக்கத்தில், பிரபல தயாரிப்பாளர் ராஜு தயாரிப்பில் உருவாக்கவுள்ள இத் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், படத்தின் நாயகி தொடர்பான தகவல் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. படத்தில் தளபதிக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார் என வெளியாகயிருந்தது.
தமன்னா நடிக்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது பிரபல ஹிந்தி நடிகைகள் இந்த பட்டியலில் இணைந்துள்ளனர்.
அண்மையில் வெளியான தகவலின்படி ‘டோனி’ திரைப்படத்தின் நாயகி திஷா பதானி நடிக்கவுள்ளாரென தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும் தற்போது பிரபல நடிகை கிரித்தி சனோன் தளபதிக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் ஹிந்தியில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ஹவுஸ்ஃபுல்4, பரேலி கி பர்ஃபி ஆகிய திரைப்படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
#Cinema
Leave a comment