தளபதி விஜய் நடிப்பில் மிகப்பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘பீஸ்ட்’.
படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்றன.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையில் படத்தின் பாடல்கள் வேற லெவலில் உருவாகியுள்ளன.
மிகப்பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியீட்டுக்கு காத்திருக்கும் இந்த திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் புரமோ நேற்று மாலை வெளியாகியுள்ள நிலையில், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் எதிர்வரும் 19 ஆம் திகதி வெளியாகவுள்ளது என உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், வெளியாகியுள்ளது இந்த புரமோ படத்துக்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
ஏற்கனவே அரபிக் குத்து பாடல், புரமோ, மற்றும் பாடல் இணையத்தளத்தை கலக்கி வரும் நிலையில், பாடல் பல சாதனைகளையும் தனதாக்கி கொண்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள செகண்ட் சிங்கிள் பாடல் புரமோவில் தளபதி விஜய், அனிருத், நெல்சன், பூஜா ஹெக்டே ஆகியோர் இணைந்து நடனமாடும் காட்சிகள் பட்டையைக்கிளப்புகின்றன.
வழமை போலவே தளபதி செம ஸ்டைலில் ஆடல் பாடலுடன் கலக்கும் இந்த புரமோ தற்போது இணையத்தளங்களை ஆக்கிரமித்துள்ளது.
#Cinema
Leave a comment