EyGkmMfUUAQE wf e1638562045106
பொழுதுபோக்குசினிமா

வெள்ளித்திரையில் அஸ்வின்- ஷிவாங்கி – புகழ் கூட்டணி

Share

விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானவர் அஸ்வின். குறிப்பாக மிகப்பெரும் பெண் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளவர்.

ஆல்பம் பாடல்கள் மூலமும் விளம்பர படங்கள் மூலமும் சின்னத்திரையில் தலைகாட்டி வந்த அஸ்வின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடித்த ஆல்பம் பாடல்கள் மிகப்பெருமளவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றன. அதனைத் தொடர்ந்து தற்போது வெள்ளித்திரையில் கால்பதித்துள்ளார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தனது நகைச்சுவையால் அனைவரையும் கட்டிப்போட்ட புகழுடன் இணைந்து ‘என்ன சொல்ல போகிறாய்’  திரைப்படத்தில் இணைந்துள்ளார் அஸ்வின். படத்துக்கு அஸ்வின் – புகழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் அறிமுகமானாலும், குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தனது சுட்டித்தனத்தாலும் குழந்தைத்தனத்தாலும் மிகப்பெரும் ரசிகர்களை இழுத்துபோட்டுள்ளவர் ஷிவாங்கி.

இந்த நிகழ்ச்சியால் அஸ்வின் – ஷிவாங்கி ஜோடிக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு. அஷாங்கி என செல்லப்பெயர் கொண்டு இந்த ஜோடி அழைக்கப்படுவது அனைவரும் அறிந்ததே.

அஸ்வின் – ஷிவாங்கி ஜோடி திரையில் இணையவேண்டும் என்பது அனைவரதும் ஆசை. இந்த எதிர்பார்ப்பை ஆல்பம் பாடலில் இணைந்து நிறைவேற்றியது அஷாங்கி ஜோடி.

தற்போது என்ன சொல்ல போகிறாய் திரைப்படம் மூலம் அஸ்வின் – ஷிவாங்கி – புகழ் கூட்டணி இணைந்துள்ளமை ஒட்டுமொத்த ரசிகர்களையும் குஷிப்படுத்தியுள்ளது.

படத்தின் டீசர் நேற்று வெளியாகியுள்ளது. படத்தில் இரண்டு கதாநாயகிகள். அஸ்வினுடன் புகழ் இணைந்துள்ளமை படத்தில் காமெடி, கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்த நிலையில், இந்த படத்தில் ஷிவாங்கி குரலில் “உருட்டு” என்னும் பாடல் இடம்பெற்றுள்ளது. இந்த பாடல் தற்போது ஷிவாங்கி – அஸ்வின் ரசிகர்களால் வைரலாகி வருகிறது.

esp 4 esp 3

#Cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
5 20
சினிமாபொழுதுபோக்கு

விஜய் கேட்ட கேள்வியால் நடிப்பதையே நிறுத்திய நடிகை ரோஜா… அப்படி என்ன சொன்னார்?

தமிழ் சினிமாவில் 90களில் கலக்கிய முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ரோஜா. தமிழ், தெலுங்கு,...

4 20
சினிமாபொழுதுபோக்கு

34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா

தென்னிந்திய சினிமாவில் திறமையான நடிகைகளில் ஒருவரான அமலா பாலுக்கு இன்று பிறந்தநாள். 34வது பிறந்தநாளை கொண்டாடும்...

3 20
சினிமாபொழுதுபோக்கு

வசூல் நாயகனாக மாறிய பிரதீப்.. Dude படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல்..

அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் திரைக்கு வந்த...

2 20
சினிமாபொழுதுபோக்கு

நான் விவாகரத்து பெற்றபோது சிலர் கொண்டாடினார்கள்.. சமந்தா உடைத்த ஷாக்கிங் விஷயம்!

இந்திய அளவில் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவர் சமந்தா. இவர் தற்போது படங்கள் மட்டுமின்றி வெப் தொடர்களிலும்...