nayan 2
பொழுதுபோக்குசினிமா

ரசிகர்கள் கூட்டத்தில் நயன் – வைரல் வீடியோ

Share

ரசிகர்கள் கூட்டத்தில் நயன் – வைரல் வீடியோ

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

இயக்குநரும் நயன்தாரா காதலனுமான விக்னேஷ்சிவன் இயக்கத்தில், ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது.

இந்த திரைப்படத்தில், விக்னேஷ்சிவன், நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் ‘நானும் ரௌடி தான்’ வெற்றிக்கு பிறகு மீண்டும் கூட்டணி அமைத்துள்ளனர். இவர்களுடன் தற்போது சமந்தாவும் கைகோர்த்துள்ளார்.

‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் விஜய் சேதுபதி, நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு தற்போது பாண்டிச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பு தளத்துக்குச் சென்ற நயன்தாரா ரசிகர்கள் கூட்டத்தில் சிக்குண்டுள்ள வீடியோவே வைரலாகியுள்ளது.

இன்றைய படப்பிடிப்புக்கு நயன்தாரா செல்லும்போது, அவர் தங்கியிருந்த ஹொட்டல் முன்னாள் ரசிகர்கள் பட்டாளம் ஒன்றுகூடியுள்ளது. இந்த நிலையில், நயன்தாரா அவரது பாதுகாவல்களால் காரில் ஏற்றப்பட்டு அனுப்பி வைத்துள்ளனர். காரின் உள்ளிருந்து நயன்தாரா தனது ரசிகர்களுக்கு கையசைத்து விட்டு செல்லும் காட்ச்சியும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...