Meena
சினிமாபொழுதுபோக்கு

தவறான செய்திகளை பரப்ப வேண்டாம்! – மீனா உருக்கம்

Share

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் ஜூன் 28-ந் திகதி இரவு காலமானார். இச்செய்தி திரையுலகை பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

48 வயதாகும் இவருக்கு சில தினங்களுக்கு முன் திடீரென நுரையீரலில் தொற்று அதிகமானதால், நுரையீரல் மற்றும் இதயம் செயலிழந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு உறுப்புகள் கிடைக்காத நிலையில், ஒவ்வொரு உறுப்புகளும் செயலிழந்து சிகிச்சை பலனின்றி வித்யாசாகர் உயிரிழந்தார்.

திரைப்பிரபலங்கள் பலர் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

வித்யாசாகரின் உடல் ஊர்வலமாக பெசன்ட் நகர் மின்மயானத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது இறுதி சடங்கு முடிந்ததும் உடல் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில் வித்யாசாகரின் மரணம் குறித்து பல வதந்திகள் வெளியாகி வருகிறது.

இதுகுறித்து நடிகை மீனா தற்போது இணையத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், நான் என் கணவரின் இறப்பினால் ஆழ்ந்த சோகத்தில் உள்ளேன். ஊடகத்தினர் இந்த சூழ்நிலையில் எங்கள் தனியுரிமையை மதிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இந்த விஷயத்தில் மேலும் தவறான செய்திகளை பரப்புவதை தயவு செய்து நிறுத்துங்கள்.

இந்த கடினமான சூழலில் என்னுடன் இருந்த நல் உள்ளங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் இதனை கண்டிக்கும் வகையில் நடிகை குஷ்பு சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

#cinema #meena #death

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
17496249550
சினிமாசெய்திகள்

பிரமாண்டமாக வெளியாகிய “சூர்யா 46” படத்தின் போஸ்டர்..! – உற்சாகத்தில் ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் நேர்மையான நடிப்பு மற்றும் பசுமை நிறைந்த கதைகளை தேர்ந்தெடுக்கும் தேர்ச்சியுமாகத் திகழும் நடிகர்...

17496235490
சினிமாசெய்திகள்

‘முத்த மழை’ பாடலின் வெற்றிப் பின்னணி… – பாடலாசிரியர் சிவா ஆனந்த் உருக்கம்!

இசை உலகில் சமீபத்தில் வைரலாகிய பாடல் ஒன்று என்றால், அது ‘முத்த மழை’ தான். இசை...

17495764520
சினிமாசெய்திகள்

விமர்சனங்கள் காசுக்காகவா? “ரெட்ரோ” தோல்விக்கு இதுவே காரணமா?

விஜய் டிவியில் நடைபெற்ற நீயா நானா நிகழ்ச்சியில் தமிழ் சினிமா விமர்சன கலாச்சாரத்தையே சுட்டிக்காட்டும் பெரும்...

17496168770
சினிமாசெய்திகள்

பிரபல காமெடி நடிகர் காலமானார்..! அதிர்ச்சியில் திரையுலகம்..!

தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக வலம்வந்து, தனித்துவமான நகைச்சுவை நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம்...